Ravi Shastri On Hardik Pandya: ஹர்திக் பாண்டியா கரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக ரவிசாஸ்திரி கூறியிருக்கிறார். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான அவர், 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்குப் பிறகு, அவர் பென்ஸ்டோக்ஸ் போல் ஒருநாள் போட்டிக்கு விடை கொடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் ரவிசாஸ்திரி பேசும்போது, "இன்றைய காலகட்டத்தில் போட்டிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சர்வதேச போட்டிகள் மற்றும் கிரிக்கெட் லீக்குகள் அதிகம் இருப்பதால், தொடர்ச்சியாக வீரர்களால் விளையாட முடியாது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி என மூன்று வடிவங்களிலும் அனைத்து வீரர்களாலும் விளையாட முடியாது.
மேலும் படிக்க | இதை செய்தால் ரிஷப் பன்டுக்கு கோடிகள் கொட்டும்! ஆருடம் கூறும் வேகப்புயல்
இது வீரர்களுக்கு மனதளவிலும், உடலளவிலும் மிகப்பெரிய சோர்வை ஏற்படுத்தும். விளையாட்டின் முக்கியத்துவத்தால் டெஸ்ட் கிரிக்கெட் எப்போதும் இருக்கும். ஆனால், எந்த ஃபார்மேட்டில் விளையாட வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு வீரர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே, எந்த பார்மேட்டில் விளையாட வேண்டும் என தேர்தெடுக்கும் வீரர்களும் உள்ளனர். ஹர்திக் பாண்டியா கூட 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதை அதிகம் விரும்புகிறார். அந்தப் போட்டிகளைத் தவிர வேறு போட்டிகளில் விளையாட நான் விரும்பவில்லை என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார்.
அடுத்த ஆண்டு இந்தியாவில் உலகக் கோப்பை இருப்பதால் ஹர்திக் பாண்டியா 50 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடுவார். அதன் பிறகு அவர் ஒருநாள் போட்டி விடை கொடுக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. மற்ற வீரர்களுக்கும் இதேபோல் நடப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். எந்த வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதை தேர்வு செய்ய அவர்களுக்கு முழு உரிமையும் உள்ளது. 20 ஓவர் போட்டிகள் 50 ஓவர் போட்டிகளை பின்னுக்குத் தள்ள அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஐசிசி உலகக்கோப்பைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால், இந்த வடிவிலான கிரிக்கெட் போட்டிகள் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியாவுக்கு கடும் போட்டி கொடுக்கப்போகும் ஆல்ரவுண்டர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ