சையது முஸ்டாக் அலி கோப்பையை மீண்டும் கைப்பற்றியது தமிழ்நாடு
சையது முஷ்டாக் அலி கிரிக்கெட் தொடரில் கர்நாடகா அணியை வீழ்த்திய தமிழக அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது
டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் நடைபெற்ற சையது முஸ்டாக் அலி இறுதி போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து தமிழகத்தை வெற்றிபெறச் செய்தார் அதிரடி வீரர் ஷாருக்கான். இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்று உள்ளது தமிழ்நாடு. கடந்த 20ம் தேதி நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி தொடர்ந்து 3வது முறையாக இறுதி போட்டிக்கு நுழைந்து இருந்தது தமிழ்நாடு.
ALSO READ ஹைதராபாத்தை பந்தாடி டி-20 இறுதிப்போட்டிக்குள் நுழைந்த தமிழ்நாடு
விஜய் ஷங்கர் தலைமையில் தமிழ்நாடு அணியும், மனிஷ் பாண்டே தலைமையில் கர்நாடகா அணியும் இறுதி போட்டியில் மோதின. டாஸ் வென்ற தமிழ்நாடு முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. சிறப்பாக பந்து வீசிய சாய்கிஷோர் கர்நாடக அணியின் முதல் 2 விக்கெட்களை வீழ்த்தினார். பவர் பிளே முடிவதற்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது கர்நாடகா. அதன்பின் ஜோடி சேர்ந்த அபினவ் மற்றும் பிரவீன் அணியை சரிவில் இருந்து மீட்டனர். 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் அடித்தது கர்நாடகா. தமிழ்நாடு அணி சார்பில் 4 ஓவர்களுக்கு 12 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார் சாய் கிஷோர்.
டி20 போட்டிகளில் குறிப்பாக பைனலில் 152 ரன்கள் கடின இலக்காகவே பார்க்கபடுகிறது. இருப்பினும் தமிழ்நாடு அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. ஹரி நிஷாந்த் 12 பந்துகளில் 23 ரன்கள் அடித்து வெளியேறினார். ஜெகதீசன் 46 பந்துகளில் 41 ரன்கள் அடித்தார். அதன் பின் இறங்கிய சாய், சஞ்சய், விஜய் ஷங்கர், முகமது ரன்கள் அடிக்க தவறினர். இதனால் போட்டி கர்நாடகா பக்கம் சாய்ந்தது. போட்டியை தன் கையில் எடுத்த ஷாருக்கான் முடிவை மாற்றினார். தனி ஆளாக நின்று தமிழ்நாடு அணிக்காக போராடினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து தமிழகத்தை வெற்றிபெறச் செய்தார் அதிரடி வீரர் ஷாருக்கான். இதன் மூலம் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது தமிழ்நாடு. 15 பந்துகளில் 33 ரன்கள் அடித்து ஷாருக்கான் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ALSO READ ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு செல்ல இந்தியாவிற்கு வாய்ப்பு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR