சையது அலி முஷ்டாக் கிரிக்கெட் (Cricket) தொடரில் ஹைதராபாத் அணியை வீழ்த்திய தமிழக அணி, தொடர்ச்சியாக 3வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
சையது அலி முஷ்டாக் 20 ஓவர் (T-20) தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தமிழக அணியின் கேப்டன் விஜய் சங்கர் பவுலிங்கை தேர்ந்தெடுத்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி, தமிழக அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஒரு கட்டத்தில் 47 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.
அந்த அணியில் பின்வரிசையில் களமிறங்கிய தியாகராஜன் மட்டும் தனியொருவராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 25 பந்துகளில் 24 ரன்களை எடுத்த அவர், சரவணக்குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எக்ஸ்ட்ராஸ் வகையில் 11 ரன்கள் கிடைக்க, ஹைதராபாத் அணி 18.3 ஓவரில் 90 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இரண்டு பேர் ரன் கணக்கை தொடங்காமலும், எஞ்சியோர் ஒற்றை இலக்க ரன்களிலும் ஆட்டமிழந்து நடையைக் கட்டினர்.
அற்புதமாக பந்துவீசிய சரவணக்குமார் 5 விக்கெட்டுக்களை அள்ளினார். அவருக்கு பக்கபலமாக பந்துவீசிய முருகன் அஷ்வின் மற்றும் முகமது 2 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ALSO READ:டிராவிட் தலைமையில் சாதித்துக் காட்டிய இந்திய அணி!
இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழக அணி, 14.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 92 ரன்களை எடுத்து வெற்றியைப் பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. சிறப்பாக விளையாடிய கேப்டன் விஜய் சங்கர் 40 பந்துகளில் 43 ரன்களை எடுத்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சாய் சுதர்சன், 31 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் முறையே 14 மற்றும் 1 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். இந்த தொடரின் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் கர்நாடகா மற்றும் விதர்பா அணிகள் மோத உள்ளன.
டெல்லி (Delhi) அருண்ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டியில் தமிழக அணியை எதிர்கொள்கிறது. தமிழக அணியைப் பொறுத்தவரை சையது அலி முஷ்டாக் 20 ஓவர் தொடரில் தொடர்ச்சியாக 3வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நூழைந்துள்ளது.
ALSO READ: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR