மகளிர் டி-20 உலக கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா அரை இறுதிக்கு தகுதி
மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் அரை இறுதிக்கு தகுதி பெற்ற இந்திய மகளிர் அணி
6_வது மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் தென் அமெரிக்கா கயானாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 நாட்டின் அணிகள் பங்கேற்றனர். இந்த அணிகளை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. அதில் "ஏ" பிரிவில் தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவு, இங்கிலாந்து, ஸ்ரீலங்கா பங்களாதேஷ் அணிகளும், "பி" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளும் இடம்பெற்றன.
இதில் இந்தியா தன் முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தானிடம் வெற்றி பெற்றது. நேற்று மூன்றாவது போட்டி நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களம் இறங்கிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மிதாலி ராஜ் 51(56) ரன்கள் எடுத்தார்.
பின்னர் 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய அயர்லாந்து அணி, மிடில் வரிசையில் களம் கண்டவர்கள் சரியாக ஆடாததால், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் ரன் சேர்ப்பது குறைந்தது. இறுதியா 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு அயர்லாந்து மகளிர் அணி வெறும் 93 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய மகளிர் அணி தொடர்ந்து மூன்று வெற்றிகளை பெற்றதால் அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் ஆட்ட நாயகி விருதை மிதாலி ராஜ் பெற்றார்.