புதுடெல்லி: இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான இந்தியாவின் டெஸ்ட் அணியை பி.சி.சி.ஐ தேர்வுக் குழு வெள்ளிக்கிழமை (2021, மே 7ஆம் தேதி) அறிவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்ற்கான இந்திய டெஸ்ட் அணியை பி.சி.சி.ஐயின் மூத்த தேர்வுக் குழு அறிவித்துள்ளது.


இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான டெஸ்ட் அணியையும் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. ஜூன் மாதம் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்குப் பிறகு, இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது 


Also Read | இந்தியாவுக்காக உணர்ச்சிவசப்பட்ட நியூசிலாந்து IPL வர்ணனையாளர்: ட்விட்டரில் உருக்கம்.


டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி ஜூன் 18 முதல் 22 வரை சவுத்தாம்ப்டனில் நடைபெறும், இதன் பின்னர் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14 வரை நடைபெறும். இந்தியாவின் 20 பேர் கொண்ட டெஸ்ட் அணியில், ஸ்டார் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இடம் பெற்றுள்ளார்.  ஹர்திக் பாண்ட்யா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை.  


இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள்: ரோஹித் சர்மா, சுப்மான் கில், மாயங்க் அகர்வால், சேடேஷ்வர் புஜாரா, விராட் கோஹ்லி (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஆர்.கே. அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரீத் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷார்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், கே.எல். ராகுல்.


காத்திருப்பு வீரர்கள்: அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், அர்ஜன் நாகவாஸ்வாலா


Also Read | CSK வீரர்கள் அனைவரும் கிளம்பிய பிறகே தோனி ராஞ்சிக்கு செல்வார்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற  ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR