இந்தியாவுக்காக உணர்ச்சிவசப்பட்ட நியூசிலாந்து IPL வர்ணனையாளர்: ட்விட்டரில் உருக்கம்

நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் டவுல் ஐபிஎல் 2021 இன் ஒரு பகுதியாக இருந்தார். ஐ.பி.எல் இன் வர்ணனைக் குழுவில் சைமன் இடம்பெற்றிருந்தார். ஐ.பி.எல் ஒத்திவைக்கப்பட்ட பின்னர், சைமன் தனது நாட்டுக்கு திரும்பியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 6, 2021, 02:36 PM IST
  • கொரோனா தொற்று இந்தியாவில் உச்சத்தில் உள்ளது.
  • இந்தியாவிலிருந்து நியூசிலாந்து திரும்பிய IPL வர்ணனையாளர் உருக்கான ட்வீட்.
  • இந்த கடினமான நேரத்தில் உங்களை விட்டு அங்கிருந்து வெளியேறியதற்கு வருந்துகிறேன்-சைமன்
இந்தியாவுக்காக உணர்ச்சிவசப்பட்ட நியூசிலாந்து IPL வர்ணனையாளர்: ட்விட்டரில் உருக்கம் title=

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று எண்னிக்கை அதிகரித்து வருவதால் IPL 2021 பாதியிலேயே நிறுத்தப்பட்டு தேதி அறிவிக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. IPL-லின் பயோ பபிளையும் மீறி பல வீரர்களுக்கும் குழு உறுப்பினர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், BCCI இந்த லீக்கை ஒத்திவைத்தது. ஐ.பி.எல். இல் பல்வேறு அணிகளைச் சேர்ந்த சில வீரர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் (Coronavirus) தற்போது இந்தியாவில் நிலைமை தீவிரமாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் டவுல் (Simon Doull)  இந்திய மக்களுக்காக மிகவும் உணர்ச்சிகரமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

பதிவில் உணர்ச்சிவசப்பட்டார் சைமன் 

நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சைமன் டவுல் ஐபிஎல் 2021 (IPL 2021) இன் ஒரு பகுதியாக இருந்தார். ஐ.பி.எல் இன் வர்ணனைக் குழுவில் சைமன் இடம்பெற்றிருந்தார். ஐ.பி.எல் ஒத்திவைக்கப்பட்ட பின்னர், சைமன் தனது நாட்டுக்கு திரும்பியுள்ளார்.

இந்த கடினமான நேரத்தில் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்தார்.
தனது ட்விட்டர் பதிவில், சைமன், "அன்பான இந்தியா, உங்களிடமிருந்து இத்தனை ஆண்டுகளில் எனக்கு ஏராளமான அன்பு கிடைத்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் உங்களை விட்டு அங்கிருந்து வெளியேறியதற்கு வருந்துகிறேன். இந்த நோயுடன் போராடுபவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த பிரார்த்தனை. பாதுகாப்பாக இருக்க உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். உங்களை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்" என்று எழுதியுள்ளார்.

ALSO READ: IPL 2021: CSK பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி

நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 4.12 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர், 3980 பேர் இறந்தனர்

இந்தியாவில் கொரோனா தொற்றால் நிலைமை மிகவும் மோசமாக்கி வருகிறது. தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரிப்பதால், இறப்புகளும் அதிகரித்து வருகின்றன. கோவிட் -19 இன் புதிய எண்ணிக்கைகள் இதுவரை பதிவான அனைத்து அளவுகளையும் முறியடித்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 4.12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3980 பேர் இறந்தனர். கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து 24 மணி நேரத்தில் பதிவான தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையாகும் இது. இதனுடன் இந்தியாவில் மொத்தம் பதிவான தொற்றின் எண்ணிக்கை 2,10,77,410 ஆக உள்ளது. 2,30,168 பேர் உயிர் இழந்துள்ளனர்.

ALSO READ: IPL 2021: விரைவில் லீக் போட்டிகள், BCCI முக்கிய முடிவு!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News