WTC: இந்தியாவின் ஆட்டத்தைப் பார்த்து யூடர்ன் அடித்த மைக்கேல் வாகன்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்குப் பிறகு, இந்திய அணியை அவமானப்படுத்திய மைக்கேல் வாகன், இந்திய அணியைப் புகழ்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்குப் பிறகு, இந்திய அணியை அவமானப்படுத்திய மைக்கேல் வாகன், இந்திய அணியைப் புகழ்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
புதுடெல்லி: இந்தியாவுக்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி (IND vs NZ) தொடர்கிறது. முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்தானது.
இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது, வானிலையினால் ஏற்பட்ட வெளிச்சக் குறைவினால் போட்டி நடுநடுவே பல முறை நிறுத்தப்பட்டது. பேட்டிங் செய்வதற்கு சாதகமான நிலைமை இல்லாத நிலையிலும் இந்திய வீரர்கள் ரன்களை விளாசித் தள்ளினர்.
முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணியின் ஆட்டம் அபாரமாக இருந்ததாக அனைவரும் பாராட்டும் நிலையில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ள கருத்து வைரலாகிறது.
எப்போதுமே இந்திய அணியை அவமானப்படுத்தும் வகையில் அவதூறாக பேசும் மைக்கேல் வாகன், இந்த முறை இந்திய அணியைப் பாராட்டிப் பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
Also Read | WTC Final டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை அவுட் செய்த மழை
மைக்கேல் வாகன் (Michael Vaughan) செய்துள்ள ட்வீட்டில், 'சவுத்தாம்ப்டனில் 225 ரன்கள் என்பது அருமையான ஸ்கோர். இந்திய அணி இதுவரை சிறப்பாக விளையாடியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்ட பின்னர், மைக்கேல் வாகன் டீம் இந்தியாவை ட்ரோல் செய்தார் முதல் நாள் ஆட்டத்தின்போது இங்கிலாந்தின் மோசமான வானிலை இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்றியது என்று எழுதினார். 'வானிலை இந்தியாவை காப்பாற்றிவிட்டது' என்று அவர் ட்வீட் செய்திருந்தார்.
டாஸ் இழந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் நல்ல தொடக்கத்தை அளித்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தனர்.
ஆனால் அதற்குப் பிறகு, 26 ரன்களுக்குள், இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்தது. அதன் பிறகு விராட் கோலி மற்றும் ரஹானே ஆகியோர் அணிக்கு வலு சேர்த்தனர். மோசமான வெளிச்சம் காரணமாக இரண்டாவது நாளில் 64.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன.
இரண்டாம் நால் ஆட்டத்தின் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 44, அஜிங்க்யா ரஹானே 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
Also Read | WTC Final,Ind vs NZ: வெற்றிபெறும் அணிக்கு கிடைக்கப்போகும் பரிசுத்தொகை எவ்வளவு?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR