WTC Final டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை அவுட் செய்த மழை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியின் முதல் நாள் விளையாட்டு ரத்தானது. ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 18, 2021, 03:38 PM IST
  • WTC Final டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை அவுட் செய்த மழை
  • முதல் நாள் போட்டி ரத்தானது
  • கலக்கப்போவது யாரு? இந்தியாவா? நியூசிலாந்தா?
WTC Final டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை அவுட் செய்த மழை title=

இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யூ.டி.சி) இறுதிப் போட்டி தொடர்பான முக்கியத் தகவலை பி.சி.சி.ஐ பகிர்ந்து கொண்டது. மழைத்தூறல் தொடர்வதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியின் முதல் நாள் விளையாட்டு ரத்தானது.

தி ரோஸ் பவுல் (The Rose Bowl) மைதானத்தின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட பி.சி.சி.ஐ (BCCI) "சவுத்தாம்ப்டனில் இருந்து குட் மார்னிங். நாங்கள் திட்டமிடப்பட்ட ஆட்டத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்கு அப்பால் இருக்கிறோம், ஆனால் அது இங்கே தொடர்ந்து தூறல் வீசுகிறது. போட்டி அதிகாரிகள் இப்போது களத்தில் உள்ளனர். # WTC21" என்ற தகவலை செய்தியாக பகிர்ந்துக் கொண்டது.

அதோடு, " Update: துரதிர்ஷ்டவசமாக ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் நாள் அமர்வில் எந்த ஆட்டமும் இருக்காது. # WTC21".

ஜூன் 23 அன்று நடைபெறும் இறுதி நாள் ஆட்டத்தில் தான் கோப்பை யாருக்கு என்பது முடிவாகும். ஆனால், வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியாமல் போட்டி டிரா ஆனால், இரு அணிகளுக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பகிர்ந்து வழங்கப்படும்.

Also Read | WTC Ind vs NZ: வெற்றிபெறும் அணிக்கு கிடைக்கப்போகும் பரிசுத்தொகை எவ்வளவு?

இந்தியா vs நியூசிலாந்து, சவுத்தாம்ப்டன் வானிலை முன்னறிவிப்பு

"ஜூன் 18, வெள்ளிக்கிழமை, சவுத்தாம்ப்டனில் வானிலை பெரும்பாலும் மேகமூட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, நாள் முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்று இங்கிலாந்து வானிலை அலுவலக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

"அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறைவுதான். மழையால் சில சாலைகள் பாதிக்கப்படலாம். சில இடங்களில் கடுமையான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், இந்த வானிலை நாள் முழுவதும் தொடரலாம். இப்பகுதியில், 31mph வரை வேகத்தில் காற்று வீசும்.

 ஐ.சி.சி டபிள்யூ.டி.சி (ICC WTC final) இறுதிப் போட்டி ஆரம்பத்தில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவிருந்தது, ஆனால் கோவிட் -19 சிக்கல்கள் மற்றும் bubble வசதிகள் காரணமாக, விளையாட்டு சவுத்தாம்ப்டனுக்கு மாற்றப்பட்டது. இருப்பினும், வானிலை விளையாட்டுக்கு உகந்ததாக இல்லை.

Also Read | WTC Final: மகுடம் யாருக்கு; இந்தியா vs நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை

டெஸ்ட் போட்டியில் விளையாடும் 8 முன்னணி அணிகள் 2019-ம் ஆண்டு முதல் 2021 வரை விளையாடும் டெஸ்ட் போட்டிகளின் வெற்றிகளின் அடிப்படையில் இந்த போட்டி நடைபெறும். எட்டு அணிகளில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும்.  

கடந்த ஜுலை மாதம் 2019-ஆம் ஆண்டு இந்த போட்டி துவங்கின. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இறுதிப் போட்டி நாளன்று மழையால் நிலைமை மாறிவிட்டது. கிரிக்கெட்டின் பல வடிவங்களில் மிகவும் நேர்த்தியான வடிவமாக கருதப்படும் டெஸ்ட் போட்டிகளுக்கான முதல் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி சவுத்தாம்ப்டனின் ரோஸ் பவுலில் இன்று துவங்கவிருந்தது. 

இந்த முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிபின் இறுதிப்போட்டியில் (WTC Final) இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதவுள்ளன. இந்த போட்டியில் இந்திய அணி தன் முழு திறனுடன் விளையாடும் என்றும் தனது பலத்தை நிரூபிக்கும் என்று காத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு மழை ஏமாற்றம் அளித்துவிட்டது.

Also Read | Olympics மற்றும் Wimbledon இல் இருந்து விலகுவதாக ரஃபேல் நடால் அறிவிப்பு: காரணம் இதுதான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News