ஜெய்ஸ்வாலுக்கு பிடித்த உணவுகள் இவைதான்... வெற்றியின் ரகசியம் இதுதானா...!
Yashasvi Jaiswal Diet: யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பிடித்த உணவுகள் குறித்தும், அவரின் ஆட்டம் குறித்தும் அவரது தந்தை பூபேந்திர ஜெய்ஸ்வால் பேட்டி அளித்துள்ளார்.
Yashasvi Jaiswal Diet: இந்திய அணி தற்போது பெரிய மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது எனலாம். டி20, ஓடிஐ ஒருபுறம் இருக்க டெஸ்ட் அரங்கிலும் இந்திய அணி இளம் வீரர்களால் தற்போது நிரம்பி வழிகிறது எனலாம். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து தனது தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி விலகிய நிலையிலும், புஜாரா, ரஹானே ஆகியோரை விலக்கி வைத்திருந்த நிலையிலும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் சற்று பலவீனமாக தோற்றமளித்தது.
இதன் நடுவே, கேஎல் ராகுலின் காயம், ஷ்ரேயாஸ் ஐயர் ஃபார்மில் இல்லாதது போன்றவை இந்திய அணியின் மிடில் ஆர்டரை மேலும் பலவீனமாக்கியது. அதனை பலப்படுத்த சுப்மான் கில், ரஜத் பட்டிதார், ஜடேஜா, சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரேல் போன்றோர் தற்போது கடுமையாக போராடி வருகின்றனர் எனலாம், தேவ்தத் படிக்கல் பேக்அப் வீரராக பெவிலியனில் அமர்ந்திருக்கிறார்.
600 ரன்கள்
ஆனால், இந்திய அணி கவலைப்படவே தேவையில்லாத ஒரு வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த டெஸ்ட் தொடரில் உருவெடுத்துள்ளார். டி20 போட்டிகளில் ஓப்பனிங்கில் இறங்கி விளாசுவது போல், அதிரடியாக விளையாடி இரண்டு இரட்டை சதங்களை விளாசி மொத்தம் 600 ரன்களுக்கு மேல் இந்த தொடரில் குவித்த ஒரே வீர்ர என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றிருக்கிறார்.
மேலும் படிக்க | லண்டன்ல ஜாலியா இருக்குற விராட் கோலி: இந்தியாவுக்கு எப்போது வருவார்?
இனி இந்தியாவின் ஆல்-பார்மட் வீரர் யார் என்றால் எந்த தயக்கமும் இன்றி ஜெய்ஸ்வாலின் பெயரை சொல்லலாம், அந்தளவிற்கு அவரின் ஆட்டம் தனித்துவமாகிவிட்டது. ஆண்டர்சன் ஓவரில் கடந்த போட்டியில் ஹார்ட்ரிக் சிக்ஸர் விளாசியதை யாராலும் எளிதில் மறக்கவே முடியாது. குறிப்பாக, எளிய பின்னணியில் வந்து தற்போது இந்த உயர்த்தை எட்டியிருப்பது பலராலும் வியந்து பார்க்கப்படுகிறது.
மட்டன் தான் இஷ்டம்
இவை ஒருபுறம் இருக்க, யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் இந்த அபார வளர்ச்சிக்கு பல காரணங்கள் இருந்தாலும், அவரின் உணவுமுறையும் ஒரு காரணம் என்கின்றார் அவரின் தந்தை பூபேந்திர ஜெய்ஸ்வால். ஊடகம் ஒன்றில் பேட்டியளித்த அவர், தனது மகனின் வெற்றியின் ரகசியமான அந்த உணவுமுறை குறித்தும் பேசி உள்ளார்.
அதில் அவர்,"யஷஸ்விக்கு மட்டன் என்றால் மிகவும் பிடிக்கும். அவனுக்கு சாதம், பருப்பு, ரொட்டி, கறி ஆகியவையும் மிகவும் பிடிக்கும்" என தெரிவித்துள்ளார். மேலும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஆட்டம் குறித்தும் அவர் தந்தை அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அதில்,"ஸ்வீப் ஷாட்களை அவர் அழகாக விளையாடுகிறார். அவர் தொடர்ந்து அதில் பயிற்சி பெற்று வருகிறார். அவர் புதிய புதிய சாதனைகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்ட வேண்டுமே அன்றி, பழைய சாதனைகளை தகர்ப்பதில் கவனம் செலுத்தக் கூடாது" எனவும் அறிவுறுத்தி உள்ளார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த தொடரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்த அவர் 12 சிக்ஸர்களை இந்த இன்னிங்ஸில் அடித்திருந்தார். அதன்மூலம், ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை அடித்த இந்தியர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார். மேலும், வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் 12 சிக்ஸர்களை அடித்து வாசிம் அக்ரமின் சாதனையை நிகர் செய்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ