லண்டன்ல ஜாலியா இருக்குற விராட் கோலி: இந்தியாவுக்கு எப்போது வருவார்?

விராட் கோலி இப்போது லண்டனில் செட்டிலாகியிருக்கும் நிலையில், எப்போது இந்தியா திரும்ப போகிறார் என்ற அப்டேட் வெளியாகியுள்ளது.   

Written by - Karthikeyan Sekar | Last Updated : Feb 24, 2024, 06:39 PM IST
  • லண்டனில் செட்டிலான விராட் கோலி
  • ஐபிஎல் தொடருக்காக இந்தியா வருகிறார்
  • எப்போது வருகிறார் என்ற தகவல் வெளியானது
லண்டன்ல ஜாலியா இருக்குற விராட் கோலி: இந்தியாவுக்கு எப்போது வருவார்?

விராட் கோலி இப்போது குடும்பத்துடன் லண்டனில் இருக்கிறார். மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் வாமிகா, அண்மையில் பிறந்த மகன் அகோய் ஆகியோருடன் அவர் அங்கு இருக்கிறார். லண்டன் வீதிகளில் விராட் கோலி சென்றபோது எடுத்த புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் ஜாலியாக நடந்து சென்று கொண்டிருக்கிறார் விராட் கோலி. அவர் அங்கிருந்து எப்போது இந்தியா திரும்ப இருக்கிறார் என்ற அப்டேட் வெளியாகியுள்ளது.

Add Zee News as a Preferred Source

விராட் கோலி விலகல்

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர் முடிந்ததும் இந்தியா திரும்பிய விராட் கோலி, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு வேண்டும் என கேட்டுக் கொண்டார். தனிப்பட்ட காரணங்களுக்காக விடுப்பு எடுப்பதாகவும் அவர் பிசிசிஐயிடம் தெரிவித்திருந்தார். ஆனால் அப்போதே, அனுஷ்கா சர்மா கர்ப்பபமாக இருப்பதாகவும், விரைவில் குழந்தையை பெற்றெடுக்க இருப்பதால் அவருடன் இருக்க வேண்டும் என்பதற்காக விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை என கூறப்பட்டது. அது இப்போது உறுதியாகிருக்கிறது.

மேலும் படிக்க | இந்திய அணியில் கலக்கும் அண்ணன்... ரஞ்சி டிராபியில் இரட்டை சதம் அடித்த தம்பி - யாரு தெரியுமா?

அண்மையில் இந்த தகவலை விராட் கோலியே தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து கொண்டார். தங்களுக்கு அன்பு மகன் பிறந்திருப்பதாகவும், அவருக்கு அகாய் என பெயரிட்டிருப்பதாகவும் விராட் கோலி கூறியிருந்தார். மேலும், மகள் வாமிகா தனது சகோதரனை மகிழ்ச்சியோடு வரவேற்றிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து விராட் கோலி மற்றும் அனுஷ்கா தம்பதிக்கு கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

எப்போது திரும்புகிறார் விராட் கோலி?

இந்நிலையில் இப்போது ஐபிஎல் அட்டவணை வெளியாகியுள்ளதால், 10 அணிகளும் ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை தொடங்க திட்டமிட்டுள்ளனர். முதல் போட்டியே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் விராட் கோலி இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கு இடையே நடக்கிறது. இதனையொட்டி ஆர்சிபி அணி பயிற்சி மார்ச் முதல் வாரத்தில் முகாம்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இப்போது லண்டனில் இருக்கும் விராட் கோலி நேரடியாக ஆர்சிபி அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த தகவலை ஆர்சிபி அணிக்கும் அவர் தெரிவித்துவிட்டதாக கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகிறது. 

மேலும் படிக்க | IPL 2024: சிஎஸ்கே அணியின் மற்றொரு முக்கிய வீரரும் காயம் - ஐபிஎல் விளையாடுவது சந்தேகம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News