அன்று சச்சின், இன்று ஜடேஜா! இந்திய அணியில் தொடரும் சர்ச்சை!
ஸ்ரீலங்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா 574 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலம் விராட் கோலி தனது 100வது டெஸ்டில் களமிறங்கினார். முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்கம் முதலே இந்திய அணி அதிரடியாக விளையாடியது. தனது 100வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 45 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.
மேலும் படிக்க | பிசிசிஐ வெளியிட்ட புதிய சம்பள பட்டியல்! யார் யாருக்கு எவ்வளவு சம்பளம்?
தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த ரிஷப் பந்த் 96 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். 90 ரன்களுக்கு மேல் சதம் அடிக்காமல் ரிஷப் பந்த் அவுட்டானது இது நான்காவது முறை. பின்பு 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் அஸ்வின் கூட்டணி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தை பதிவுசெய்தார் ஜடேஜா, தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர் 175 ரன்களை குவித்தார். இரட்டை சதம் அடித்தார் என்று எதிர்பார்த்த நிலையில், இந்திய அணி 574 ரன்களுக்கு டிக்லர் செய்தது. ஜடேஜா இரட்டை சதம் அடித்த பிறகு டிக்லர் செய்திருக்கலாம் என்று கிரிக்கெட் ரசிகர்கள் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட்டை திட்டி வருகின்றனர்.
இதற்கு முன்னதாக 2004 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 194 ரன்கள் அடித்து இருந்தபோது இதேபோல் டிராவிட் டிக்லர் செய்தார், அந்த சம்பவம் அந்த சமயத்தில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பிறகு தற்போது ரோஹித்தின் டிக்லரும் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தேனீர் இடைவெளி வருவதற்கு 20 நிமிடங்கள் இருந்த நிலையில் ஏன் டிக்லர் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பேசிய ஜடேஜா, நான்தான் டிக்லர் செய்ய சொன்னேன். ஸ்ரீலங்கா வீரர்கள் மிகவும் சோர்வாக இருந்ததால் இந்த சமயத்தில் அவர்களின் விக்கெட்களை எளிதில் எடுக்க முடியும். அதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR