ஜிம்பாப்வே பவுலர் குடும்பத்துக்கு சர்பிரைஸ் கொடுத்த இந்திய பவுலர்
ஜிம்பாப்வே பந்துவீச்சாளரின் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக தீபக் சாஹர் கலந்துரையாடி சம்பவம் அந்நாட்டு ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு தீபக் சாஹருடன், ரசிகர்கள் மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தினர் கலகலப்பாக கலந்துரையாடினர். அப்போது, ஜிம்பாப்வே அணி வீரரின் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், நான் உங்களை ஒருமுறை தொட்டுப் பார்க்கலாமா? என கேட்க, அங்கிருந்தவர்கள் கலகலப்பின் உச்சத்துக்கே சென்றனர். ஹராரேயில் நடைபெற்ற ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய தீபக் சாஹர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆறு மாத காலத்துக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு திரும்பியிருக்கும் அவர், 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பவர்பிளேவில் ஜிம்பாப்வே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை குறிவைத்து பெவிலியன் அனுப்பினார் அவர்.
மேலும் படிக்க | எனக்கு டிப்ரஷனா? என்ன இப்படி சொல்லிட்டீங்க? விளக்கம் கொடுக்கும் விராட் கோலி
தீபக் சாஹரின் சிறப்பான பந்துவீச்சு மைதானத்தில் இருந்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. போட்டி முடிந்தவுடன் ஆட்டநாயகன் விருது பெற்ற அவரை, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் சாஹரின் ஒப்புதலைப் பெற்று அவரை தொட்டுப் பார்த்து உற்சாகமடைந்தார். இது குறித்து ரசிகர்கள் பேசும்போது, தீபக் சாஹருடன் உரையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் மென்மையாக நடந்து கொண்டார். அவரை பார்த்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம் என தெரிவித்தார். தீபக் சாஹர் பேசும்போது, ரசிகர்களை சந்தித்தது உற்சாகமாக இருந்ததாக தெரிவித்தார்.
கோவிட் காலத்தில் ரசிகர்களை தவறவிட்டோம் எனத் தெரிவித்த அவர், வீரர்களுக்கு அவர்களின் ஊக்கம் நிச்சயம் தேவை எனக் கூறினார். 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த தீபக் சாஹர், அது தன்னுடைய கையில் இல்லை எனத் தெரிவித்தார். நன்றாக உழைத்து மீண்டும் பழைய இடத்தில் இருந்து மீண்டும் வர முயற்சி செய்தேன். கடினமான பயிற்சி மேற்கொண்டதால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக பந்துவீச முடிந்தது. இனிவரும் காலங்களில் அதனை தொடர முயற்சி மேற்கொள்வேன் எனக் கூறினார்.
மேலும் படிக்க | ஆசியக்கோப்பை 2022; இந்தியா - பாகிஸ்தான் இதுவரை சந்திக்காத ஒரு மேட்ச்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ