IPL-ல் நேரத்தை வீணடித்து வருகிறார் மலீங்கா - இலங்கை!
IPL-ல் நேரத்தை வீனடித்து வருகின்றார் மலீங்கா என இலங்கை கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது!
IPL-ல் நேரத்தை வீனடித்து வருகின்றார் மலீங்கா என இலங்கை கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது!
தற்போது நடைப்பெற்று வரும் IPL தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக இலங்கையில் வேகப்பந்து வீச்சாளர் மலீங்கா செயல்பட்டு வருகின்றார். இலங்கையின் உள்ளூர் போட்டிகளிலும் விளையாடாமல், நாட்டிற்கு திரும்பாமல் தனது திறமையினை அவர் வீனடித்து வருவதாக இலங்ககை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
IPL 2018 தொடரின் போட்டிகள் தற்போது விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.
தற்போது நடைப்பெற்று வரும் இந்த IPL தொடரில் மும்பை அணிக்கான பந்துவீச்சு ஆலோசகராக இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மலீங்கா செயல்பட்டு வருகின்றார். முன்னதாக இந்தாண்டிற்கான IPL ஏலம் பெங்களூருவில் நடைப்பெறுகையில், மலிங்காவினை மும்பை இந்தியன்ஸ் அணி உள்பட எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை.
இதுகுறித்து உள்ளூர் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் "இளம் வீரர்களை கொண்டு அணிகளை அமைப்பதில், ஏலத்தில் அணிகள் தீவரம் காட்டியது. எனவே என்னை ஏலம் எடுக்காதது எனக்கு வருத்தம் அளிக்கவில்லை, எனினும் கடந்தாண்டில் IPL போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்தபோதிலும் இலங்கை அணியில் விளையட வாய்ப்பு கிடைக்காததே எனக்கு வருத்தம் அளிக்கிறது" என குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி மலிங்காவை தங்கள் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியமித்து இருப்பதாக அறிவித்தது. பின்னர் மும்பை அணியில் ஆலோசகராக அவர் நீடித்து வருகின்றார்.
இந்நிலையில் தற்போது இலங்கையில் உள்ளூர் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உள்ளூர் போட்டிகளில் அவரால் விளையாட முடியாது எனவும், IPL தொடர் முடியும் வரை அவர் மற்ற போட்டிகளில் களந்துக்கொள்ளப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மலீங்காவின் இந்த அறிவிப்பினை கண்டித்து இலங்கை கிரிக்கெட் தேர்வுகுழு இவரை எச்சரித்துள்ளது.