கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பாலாற்றங்கறை ஆஞ்சநேயர் கோயில். இங்கு வெளியூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து ஆஞ்சநேயரை தரிசித்துச் செல்வது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்ட கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இன்று ஆஞ்சநேயர் கோவிலுக்கு பக்தர்கள் வழக்கம் போல தரிசனத்திற்காக வந்தனர். அப்போது ஆஞ்சநேயர் கோயிலை ஒட்டியுள்ள ஆற்றுப் படுகையில்  மலை பாம்பு இருப்பதை கண்டனர். அந்த மலைப்பாம்பு உணவை விழுங்கிய பின்பு நகர்ந்து செல்ல முடியாமல் இருந்துள்ளது.



இது குறித்து அங்கிருந்தவர்கள் கோவில் நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். பின்பு கோயில் நிர்வாகம் சார்பில் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் 10 நீளமுள்ள மலைப்பாம்பை  லாபகமாக மீட்டு ஆழியார் அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். இந்த மலைப்பாம்பால் கோவில் அருகே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.



பொள்ளாச்சி அடுத்த பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் அருகே ஆற்றில் கரையில் 10 அடி நீளமுள்ள  மலைப்பாம்பை  வனத்துறையினர். லாவகமாக மீட்டு அடர்ந்த வனப் பகுதியில் விட்டம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க |  Viral Video: என்ன கொடுமை சார் இது... சிங்கங்களை ஓட விரட்டிய எருமை!


மேலும் படிக்க | Viral Video: சிறுத்தையிடம் சிக்கி சின்னாபின்னமான மான்... மனம் பதறவைக்கும் வீடியோ!


மேலும் படிக்க | ஷ்ஷ்... ஷூல பாம்பு: ஆடிப்போன நபர், அசத்தல் வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ