‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்துவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் பரிசுத்தொகை அறிவிப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கத்தாரில் நடந்த 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தைச் சோ்ந்த கோமதி மாாிமுத்து (30) 2 நிமிடம் 2.70 விநாடிகளில் எல்லையைக் கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.


இவரின் சாதனையை பராட்டி திமுக சாா்பில் ரூ.10 லட்சமும், காங்கிரஸ் சாா்பில் ரூ.5 லட்சமும் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. நடிகா்கள் ரோபோ ஷங்கா் ரூ.1 லட்சமும், விஜய் சேதுபதி ரூ.5 லட்சமும் வழங்கினா். இந்நிலையில், தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து-க்கு ரூ.15 லட்சமும், வெள்ளிப் பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜ்-க்கு ரூ.10 லட்சமும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என அதிமுக சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதை தொடர்ந்து, ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்துவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் பரிசுத்தொகையை அறிவித்து அரசாணையை வெளியிட்டுள்ளது. மேலும், வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவ்க்கு ரூ. 5 லட்சம் பரிசு தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.