Edappadi Palaniswami Condemned: ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் தப்பியோடி கேரளாவில் தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டார். அவரின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்


தனது சமூக வலைத்தளத்தில், "கரூர் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர், பல்வேறு நிலைகளில் கழகத்திற்கு பங்காற்றி வரும் சிறந்த களப்பணியாளர்  எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களை கைது செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன,இந்த கைதிற்கு விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.


முன்னாள் விடியா திமுக அமைச்சர், இந்நாள் புழல் சிறைவாசி திரு. செந்தில் பாலாஜிக்காக பழிவாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், சிவில் வழக்கு ஒன்றை கையில் வைத்துக்கொண்டு அதீத முறையில் சோதனைகளையும் கைது நடவடிக்கையும் மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது. 


அரசியல் காழ்ப்புணர்வோடு விடியா திமுக அரசு ஏவும் பொய் வழக்குகள் யாவையும் சகோதரர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டப்பூர்வமாக சந்தித்து வெல்வார்" என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.



மேலும் படிக்க - உண்மை கொலையாளிகள் யார்? புதிய சிசிடிவி காட்சி வெளியானது


100 கோடி ரூபாய் நிலத்தை ஆட்டைய போட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர்


100 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை போலி பத்திரம் மூலம் முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அபகரிக்க முயன்றதாக நிலத்தின் உரிமையாளர் பிரகாஷ் கரூர் காவல் நிலையத்திலும், கரூர் மாவட்டம் சார்பதிவாளர் இடமும் புகார் அளிக்கப்பட்டதின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் 100 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தின் தாய் பத்திரம் தொலைந்து விட்டதாகவும் அதற்காக அதற்காக காவல் நிலையத்தில் சி.எஸ்.ஆர் வாங்கி அதன் மூலம் அந்த நிலத்தை போலி பத்திரம் மூலம் பதிவு செய்ய முயன்றதும் அம்பலமானது.


இதனையடுத்து கரூர் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடந்து வந்த நிலையில், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இடம் விசாரணை நடந்த சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு நிலையில் விஜயபாஸ்கர் தலைமறைவானதாக தகவல் வெளியாகியது இதையடுத்து அவரை சுமார் 15 நாட்களாக தேடி வந்தனர். 


எம்.ஆர். விஜயபாஸ்கர் ஜாமீன் மனு தள்ளுபடி


தலைமறைவாக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தரப்பில் கரூர் முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த கரூர் மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் எம் ஆர் கே பாஸ்கர் தரப்பில் ஜாமீன் கேட்டு வழங்கப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தார்.


எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஏன் கைது செய்யப்பட்டார்?


100 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை போலி பத்திரம் மூலம் அபகரித்துவிட்டு தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரை, இன்று கேரளாவில் வைத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.


மேலும் படிக்க - நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் அதிரடி கைது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ