நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் அதிரடி கைது!

MR Vijayabaskar Arrested: கரூர் மாவட்டத்தில் நில மோசடி தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Jul 16, 2024, 01:59 PM IST
  • எம்ஆர் விஜயபாஸ்கர் அதிரடி கைது.
  • கேரளாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
  • விரைவில் சென்னை அழைத்து வரப்பட உள்ளார்.
நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் அதிரடி கைது! title=

MR Vijayabaskar Arrested: கரூர் மாவட்டத்தில் மன்மங்கலம் தாலுக்கா பிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் இவரது 100 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை போலி பத்திரம் மூலம் முன்னாள் அதிமுக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அபகரிக்க முயன்றதாக நிலத்தின் உரிமையாளர் பிரகாஷ் கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கரூர் மாவட்டம் சார்பதிவாளர் இடமும் புகார் அளிக்கப்பட்டதின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் 100 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தின் தாய் பத்திரம் தொலைந்து விட்டதாகவும் அதற்காக அதற்காக காவல் நிலையத்தில் சி எஸ் ஆர் வாங்கி அதன் மூலம் அந்த நிலத்தை போலி பத்திரம் மூலம் பதிவு செய்ய முயன்றதும் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | உண்மை கொலையாளிகள் யார்? புதிய சிசிடிவி காட்சி வெளியானது

தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இந்த வாழ்க்கை தீவிரமாக விசாரணை செய்ய சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது அதன் பிறகு சிபிசிஐடி போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக 6 பேரை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இடம் விசாரணை நடந்த சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு நிலையில் விஜயபாஸ்கர் தலைமறைவானதாக தகவல் வெளியாகியது இதையடுத்து அவரை சுமார் 15 நாட்களாக தேடி வந்தனர். மேலும் தலைமறைவாக உள்ள எம் ஆர் விஜயபாஸ்கர் தரப்பில் கரூர் முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது இதனை விசாரித்த கரூர் மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் எம் ஆர் கே பாஸ்கர் தரப்பில் ஜாமீன் கேட்டு வழங்கப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து எம் ஆர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேல் கொண்டனர் மேலும் தலைமறைவாக இருந்த எம் ஆர் விஜய்பாஸ்கரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று கேரளாவில் வைத்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சி பி சி ஐ டி போலீசார் கைது செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் அவரை கோவை அழைத்து வரப்பட்டு சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தலைமறைவாக இருந்த முன்னாள் அதிமுக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரை சிபிசிஐ போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பாபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எடப்பாடி பழனிசாமி கண்டனம்

எம்ஆர் விஜயபாஸ்கர் கைதிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரூர் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர், பல்வேறு நிலைகளில் கழகத்திற்கு பங்காற்றி வரும் சிறந்த களப்பணியாளர் திரு. எம்ஆர் விஜயபாஸ்கர் அவர்களை கைது செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன, இந்த கைதிற்கு விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். முன்னாள் விடியா திமுக அமைச்சர், இந்நாள் புழல் சிறைவாசி திரு. செந்தில் பாலாஜிக்காக பழிவாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், சிவில் வழக்கு ஒன்றை கையில் வைத்துக்கொண்டு அதீத முறையில் சோதனைகளையும் கைது நடவடிக்கையும் மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது. அரசியல் காழ்ப்புணர்வோடு விடியா திமுக அரசு ஏவும் பொய் வழக்குகள் யாவையும் சகோதரர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டப்பூர்வமாக சந்தித்து வெல்வார்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | என்கவுண்டர் பயம்.. பாதுகாப்பு கேட்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை ரவுடி பொன்னை பாலு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News