புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், இலவச குடிநீர் வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி உத்தரவு..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் ஏப்ரல், மே மற்றும் ஜூன்  ஆகிய  3 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான அவகாசம் முடிந்தநிலையில் ரூ.9,500 கோடிக்கு முழுபட்ஜெட் தயாரித்து மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. கடந்த 3 நாட்களுக்கு முன் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது. இதையடுத்து, இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை தொடங்கியது. 15 நிமிடங்கள் கவர்னர் கிரண்பேடிக்காக காத்திருந்த நிலையில்,  அவர் வராததால் சபாநாயகர் சிவக்கொழுந்து ஆளுநர் உரை நிறுத்தி வைப்பதாகவும், மதியம் 12.05 மணிக்கு முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என கூறி சட்டப்பேரவையை  ஒத்திவைத்தார்.


Also read | Vidhya Veerappan: கல்வியும், ஆசிரியர்களும் என்னை வடிவமைத்தன என்று கூறும் வீரப்பனின் மகள்!!


பின்னர், சட்டப்பேரவையில்  திட்டமிட்டபடி மதியம் 12.05 மணிக்கு முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், இலவச குடிநீர் வழங்கப்படும் எனவும், புதுச்சேரி உள்ள அரசு பள்ளிகளில் கருணாநிதி பெயரில் சிற்றுண்டி திட்டம் நவம்பர் 15 ஆம் தேதி அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், மாணவர்களுக்கு இட்லி , பொங்கல் மற்றும் கிச்சடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளியில் இறுதியாண்டு படிப்போர் இணையம் மூலம் கல்வி கற்க இலவசமாக லேப்டாப் தரப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.