தமிழகத்தில் மேலும் 1,091 பேருக்கு கொரோனா; மொத்த எண்ணிக்கை 24,586 ஆக உயர்வு!
சென்னையில் மேலும் 809 பேருக்கு கொரோனா பாதிப்பு... மொத்தம் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 16,585 ஆக உயர்ந்துள்ளது....
சென்னையில் மேலும் 809 பேருக்கு கொரோனா பாதிப்பு... மொத்தம் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 16,585 ஆக உயர்ந்துள்ளது....
தமிழகத்தில் இன்று மேலும் 1,091 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,586 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் மேலும் 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 55 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். தமிழகத்தில் மொத்தம் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 24,586 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 73 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 11,094 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் 12 பேரும், செங்கல்பட்டில் ஒருவரும் என மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது.
விமானம் மூலம் தமிழகம் வருவோருக்கு RT-PCR சோதனை கட்டாயம்: TN Govt
இன்று ஒரே நாளில் 536 பேர் குணமடைந்து தங்களின் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 13,706 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 10,680 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,378 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 20,857 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 2,351 பேரும் உள்ளனர். ZEENEWS TRENDING STORIESBy continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link |