வேலூர் கொணவட்டம் பகுதியில் உள்ள சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இன்று காலை காரில் வந்த கும்பல் ஒன்று கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகளை கொட்டிவிட்டு சென்றுள்ளது. காற்றில் பறந்த ரூபாய் நோட்டுகளை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவற்றை போட்டி போட்டு எடுத்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள் அங்கு சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்து, பொதுமக்கள் எடுத்து வைத்திருந்த ரூபாய் நோட்டுகளையும் வாங்கியுள்ளனர். அதனை காவல் நிலையம் கொண்டு வந்து எண்ணிய போது ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது.


மேலும் படிக்க | வீராப்பு எங்க பாஸ் போச்சு? கைதுக்கு பின் பம்மிய டிடிஎப் வாசன்!



ரூபாய் நோட்டுகளை சோதனை செய்தபோது அது கலர் ஜெராக்ஸ் எடுத்த கள்ள நோட்டுகள் என தெரியவந்தது. கள்ள நோட்டுகளை வீசி சென்ற கும்பல் யார் என்பதை அறிய அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனைர். இன்று காலையில் தேசிய நெடுஞ்சாலையில் வந்த வாகனங்கள் குறித்த விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.


காற்றில் பறந்த ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் சிலர் எடுத்து சென்றனர். அவர்கள் இந்த ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தக்கூடாது என காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வியாபாரிகள் 500 ரூபாய் நோட்டுகளை வாங்கும்போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். நேற்று முன்தினம் (செப். 29) இரவு பள்ளிகொண்டா அருகே காரில் இருந்து லாரிக்கு பணத்தை மாற்றியபோது போலீசாரிடம் ரூ.14.70 கோடி சிக்கி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று தேசிய நெடுஞ்சாலையில் கள்ள நோட்டுகளை வீசி சென்ற சம்பவம் வேலூரில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் படிக்க | 'ரூ. 25 கோடி' கத்தை கத்தையாக கள்ளநோட்டு - குஜராத் தேர்தலுக்கா அல்லது சினிமாவுக்கா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ