காருக்குள் சிக்கிய 3 குழந்தைகள் - தோல் உரிந்த நிலையில் சடலமாக மீட்பு! நடந்தது என்ன?
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள லெப்பை குடியிருப்பில் காருக்குள் சிக்கி 3 குழந்தைகள் மூச்சுத்திணறி பலியாகினர்.
நெல்லை மாவட்டம்: பணகுடி அடுத்த லெப்பை குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். ஜேசிபி ஆப்பரேட்டர் ஆன இவருக்கு நித்திஷா (7) & நித்திஸ் (5) என இரண்டு குழந்தைகள் உள்ளன.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக நாகராஜ் கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக தனது அண்ணன் மணிகண்டனின் நண்பரிடமிருந்து காரை எடுத்து வந்துள்ளார்.
கோவில் கொடை முடிந்த பின்பும் கார் நாகராஜின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்தது. அவ்வப்போது குழந்தைகளுக்கு உணவு அளிக்கும்போது அந்த காரில் குழந்தைகளை அமர வைத்து உணவு ஊட்டி வந்தனர்.
பின்னர் குழந்தைகள் காரின் உள்ளே அமர்ந்து விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டின் முன்னே விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளுக்கு கடைசியாக உணவு ஊட்டி விட்டு அவர்களது தாய் சென்றுள்ளார்.
மேலும் படிக்க | விக்ரம்: பாடல் வரிகள் திடீர் நீக்கம்- அரசியல் நெருக்கடி காரணமா?
சில மணி நேரங்களாக நாகராஜின் குழந்தைகள் இருவரும் மற்றும் பக்கத்து வீட்டில் வசித்துவரும் சுதன் என்பவரது மகனான கபிஷாந்த் ஆகியோர் காணாமல் போயுள்ளனர்.
இவர்களை வீட்டில் உள்ளவர்கள் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக அக்கம்பக்கத்தில் தேடி வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி குழந்தைகள் காரில் விளையாடிக் கொண்டிருந்ததை தான் கண்டதாக தெரிவித்துள்ளார்.
உடனடியாக வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் மயங்கிய நிலையில் மூன்று குழந்தைகள் இருப்பதை உறவினர்கள் கண்டறிந்தனர். மேலும் காரின் கதவுகள் திறக்க முடியாமல் இருந்தது. காரின் ஜன்னல்களும் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தன.
பின்னர் காரின் கதவுகளை உடைத்து குழந்தைகளை மயங்கிய நிலையில் உறவினர்கல் மீட்டனர். அப்போது குழந்தைகளின் கை, முதுகு, கால், தொடை பகுதிகளில் தோல் நெருப்பில் சுட்டது போல உரிந்து காணப்பட்டது.
எதனால் இவ்வாறு ஆனதென தெரியாமல் பதறிய பெற்றோர் குழந்தைகளை பணகுடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் குழந்தைகளை பரிசோதித்து பார்த்ததில் குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து பணகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் காத்து புகாத வாறு, வெயில் நேரத்தில் கார் முழுதும் அடைக்கப்பட்ட நிலையில் நின்றிருந்ததால் உள்ளே வெப்பம் அதிகரித்து காரின் சீட்டுகள் கொதிக்க ஆரம்பித்திருக்கும் என்றும், அப்போது குழந்தைகள் உள்ளே இருந்ததால் அவர்களின் தோலில் வெப்பம் அதிகபடியாக பட்டு அவர்களின் தோல் உரிந்திருக்கும் என மருத்துவர்கள் உகிக்கின்றனர்.
அதையடுத்து தகவல் அறிந்து வந்த சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மேலும் படிக்க | கமலின் ‘விக்ரம்’: முதல் நாளே இத்தனை கோடி வசூலா? - # Vikram Box Office Report
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR