சென்னை: தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கௌன்சிலிங், அதாவது மருத்துவக் கலந்தாய்வு நடந்து வருகிறது. புதன்கிழமை காலை 9 மணி முதல் ஜவஹர்லால் நேரு வெளிப்புற மைதானத்தில் நடைபெற்ற இந்த கலந்தாய்வில் பல மணவர்கள் கலந்துகொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

COVID-19 தொற்று காலத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் அங்கமாக மாணவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. COVID நெறிமுறையின் ஒரு பகுதியாக, புதன்கிழமை மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களும் RT-PCR சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.


இந்நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குவதாகக் கூறப்பட்டதால், அனைத்து 262 மாணவர்களும் கோவிட் சோதனைகளுக்கு கட்டாயப்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ALSO READ: Chennai: தனி மனித இடைவெளியை உறுதிசெய்ய 40 புறநகர் ரயில்கள் கூடுதலாக இயக்கப்படும்


முதலமைச்சரிடமிருந்து நேரடியாக நுழைவு அட்டை பெற்ற 18 மாணவர்களுக்கு தொற்று இல்லை என்பது சோதனைகளில் தெரிய வந்தாலும், கலந்தாய்வில் பங்குகொண்ட மாணவர்களில் எட்டு பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் அவர்களுக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை.


இந்த மருத்துவக் கலந்தாய்வு (Medical Counselling) புதன்கிழமை காலை 9 மணி முதல் ஜவஹர்லால் நேரு வெளிப்புற மைதானத்தில் நடைபெற்றது.


இதற்கிடையில், சுகாதார அமைச்சர் சி. விஜய் பாஸ்கர், மென்மையான, எளிமையான கலந்தாய்வு செயல்முறையை உறுதி செய்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், இவை நேட்டிவிட்டி சான்றிதழ்கள், சமூக சான்றிதழ்கள் மற்றும் மாணவர்களின் அடையாளத் தாள்களை கலந்தாய்வு நாளிலேயே சரிபார்க்கும் என்றும் கூறினார். செயல்முறை வெளிப்படைத்தன்மையுடன் இருக்க, தர வரிசைப் பட்டியல், எல்.ஈ.டி திரையில் காட்டப்பட்டன.


ALSO READ: அம்மா COVID-19 வீட்டு பராமரிப்பு கிட்: மக்களிடையே இன்னும் பிரபலமாகாதது ஏன்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR