கடந்த மூன்று நாட்களில், சென்னை தலைமைச் செயலகத்தில் (Secteratiat) பணிபுரியும் 56 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அலுவலகம் வரும் ஊழியர்களின் அளவை மீண்டும் 50% ஆக குறைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் நிலைக்கு ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலைமைச் செயலகம் 37 துறைகளில் 6,500 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட தமிழகத்தின் மிகப்பெரிய அரசாங்க அலுவலகமாகும். கடுமையான உத்தரவுகள் இருந்தபோதிலும், பல ஊழியர்கள், தனி மனித இடைவெளியை பின்பற்றாமலும் முகக்கவசங்களை (Face Mask) அணியாமலும் பொது இடங்களில் அரட்டை அடிப்பதைக் காண முடிந்தது. 


உடல் வெப்பநிலையை சரிபார்க்க பாரா மருத்துவ ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் அனைத்து நுழைவாயில்களிலும் இல்லை. "COVID-19 இன் முதல் கட்டத்தில், 200 செயலக ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டது. இப்போது அரசாங்கம் 100% பணியாளர்களும் பணிக்குத் திரும்ப வேண்டுமென உத்தரவிட்ட பிறகு, கடந்த மூன்று நாட்களில் 56 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்தமாக பாதிக்கப்பட்ட செயலக ஊழியர்களின் எண்ணிக்கை 256 ஆக உயர்ந்துள்ளது” என்று தமிழக செயலக சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.


வைரஸ் பரவலின் ஆரம்ப நாட்களில், அரசாங்கம், லாக்டௌனை அறிவிக்கும் போது, ​​முன்னணி துறைகளைத் தவிர அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்களின் அளவை 33% ஆகக் குறைத்தது. இருப்பினும், இது பின்னர் முழு 100% ஆக அதிகரிக்கப்பட்டது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் COVID-19 உச்சம் பெறும் என்று உலகெங்கிலும் உள்ள சுகாதார வல்லுநர்களும் மத்திய அரசும் கூறின.


இந்த நேரத்தில் அனைத்து ஊழியர்களையும் அரசு வேலைக்கு அலுவலகம் வரவழைப்பது சரியல்ல. இங்கு கடுமையான இட நெருக்கடி உள்ளதால் தனி மனித இடைவெளியை பின்பற்றுவது கடினமாக இருக்கும் என்பது செயலகத்தில் பணியில் உள்ளவர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.


ALSO READ: COVID-19: தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி எது? மாவட்ட வாரியாக முழு நிலவரம்!


டான்சா (TANSA) அலுவலக பொறுப்பாளர்களும், அன்லாக் செய்த பின்னர், பொது வரத்து அதிகரித்துள்ளது, இதன் விளைவாக தொற்று பரவ வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என கருதுகிறார்கள். “ஏதேனும் அமைச்சர் செயலகம் வந்தால், அவருடன் 15-20 பேர் வருகிறார்கள். இந்த வகையிலும் இங்கு மக்கள் வருவது அதிகமாகிறது. பொதுமக்களின் நுழைவு குறைக்கப்பட வேண்டும்” என்று டான்சாவின் செயலாளர் சி.ஆறுமுகம் கூறினார்.


COVID-19 பரவுவதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து செயலகத்தின் பொது (கட்டிடங்கள்) துறையில் இணைக்கப்பட்ட உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்கப்பட்டபோது, ​​அந்த அதிகாரி, செயலக வளாகம், மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமைகளில் மூடப்படுகிறது என்றும் அன்று முழு சுத்திகரிப்பு வேலைகளும் செய்யப்படுகின்றன என்றும் கூறினார். அனைத்து கட்டிடங்களிலும் தானியங்கி சானிடிசர்கள் (Sanitizers) வைக்கப்பட்டுள்ளன. மேலும் சானிடிசர்களைப் பயன்படுத்தி கைகளை சுத்தமாக வைத்திருக்குமாறு ஊழியர்கள் கேட்கப்படுகிறார்கள் என்று அந்த அதிகாரி கூறினார்.


ALSO READ: COVID-19 தடுப்பு மருந்து பரிசோதனையை நிறுத்திய Johnson & Johnson.. காரணம் என்ன ..!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR