தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 5,883 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது... மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 2,90,907 ஆக அதிகரிப்பு...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் இன்று மேலும் 5,883 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,90,907 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,800 ஆக உயர்ந்துள்ளது. 


இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று புதிதாக 5,883 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 5,866 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சுமார், 17 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என கண்டறியபட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,90,907 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்ட 5,883 பேரில் சென்னையில் மட்டும் 986 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், சென்னையில் மட்டும் சுமார் 1,08,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 


தமிழகத்தில் 129 ஆய்வகங்கள் (அரசு - 61 மற்றும் தனியார் - 68) உள்ளன. அதில், இன்று மட்டும் 67,553 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 31,55,619  மாதிரிகள் சோதனை செய்யபட்டுள்ளது. இன்று கொரோனா வைரஸ் உறுதியானவர்களில், 3,410 பேர் ஆண்கள், 2,473 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,75,744 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,15,136 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 27 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் இன்று மட்டும் 5,043 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்நிலையில், வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 2,32,618 ஆக உயர்ந்து உள்ளது.


ALSO READ | தமிழகம் முழுவதும் மீண்டு முழு ஊரடங்கு... எது இயங்கும்?... இயங்காது?...




தமிழகத்தில், இன்று மட்டும் கொரோனா பாதித்த 118 பேர் உயிரிழந்தனர். அதில், 81 பேர் தனியார் மருத்துவமனையிலும், 37 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 4800 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, சிக்கிசையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 53,481 ஆகவும், அதில், 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 14 ஆயிரத்து 319 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 39 ஆயிரத்து 991 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 36,597 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டுள்ளனர். 


மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்கள்....