தமிழகம் முழுவதும் மீண்டு முழு ஊரடங்கு... எது இயங்கும்?... இயங்காது?...

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் நாளை ஒருநாள், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது...!

Last Updated : Aug 8, 2020, 11:43 AM IST
தமிழகம் முழுவதும் மீண்டு முழு ஊரடங்கு... எது இயங்கும்?... இயங்காது?...  title=

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் நாளை ஒருநாள், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது...!

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூலை மாதத்தை தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்திலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும், தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். அதன் படி, ஆகஸ்ட் 31 ஆம் தேதிவரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளநிலையில், ஆகஸ்ட் மாத ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், நாளை தளர்வற்ற முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்துக் கடைகளும் மூடப்படும்.  பால் விநியோகம், மருந்தகங்கள், மருத்துவமனைகள், மருத்துவமனை ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு வாகனங்கள் தவிர, பிற, அனைத்துவகை தனியார் வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது.  தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் உட்பட அனைத்து பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டுள்ளன. 

ALSO READ | நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி... Covid-19 தடுப்பூசி வெறும் ₹.225 மட்டுமே...!

தமிழகத்தில் நேற்று மேலும் 5,880 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,856 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 24 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,85,024 ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் நேற்று பாதிக்கப்பட்ட 5,880 பேரில் சென்னையில் மட்டும் 984 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், சென்னையில் மட்டும் சுமார் 1,07,109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று மட்டும் கொரோனா பாதித்த 119 பேர் உயிரிழந்தனர்.  இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 4,690 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,759 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 14 ஆயிரத்து 053 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 35 ஆயிரத்து 184 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 35 ஆயிரத்து 787 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Trending News