அடகு கடையில் 75 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!
காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் உள்ள நகை அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு சுமார் 75 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு கூட்டு சாலை, மேல்பாடியை சேர்ந்தவர் அனில்குமார். இவர் அதே பகுதியில் சொந்தமாக நகை அடகு கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு அனில்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து இன்று காலை கடையை திறக்க வந்தபோது அனில் குமாருக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்துக்கிடந்துள்ளது.
என்னவென்றால்,அனில்குமாரின் அடகுக் கடைக்கு பக்கத்தில் இருந்த ஜூஸ் கடையின் சுவற்றில் துளையிட்டு உள்ளே சென்ற மர்ம நபர்கள், நகை வைக்கப்பட்டிருந்த இரும்பு பெட்டியை உடைத்து அதிலிருந்த சுமார் 75 லட்சம் மதிப்புடைய வெள்ளி மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மேலும் படிக்க | ஆம்பூரில் பயங்கரம் - சாலையோரம் படுத்துறங்கிய பெண்களுக்கு கத்திகுத்து !
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அனில்குமார், உடனடியாக திருவலம் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், கை ரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அது மட்டுமின்றி கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொள்ள முயற்சித்த போலீஸாருக்கு சவால் விடும் விதமாத கொள்ளையர்கள் சிசிடிவியின் ஹாட் டிஸ்கையும் கையோடு எடுத்துச்சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR