சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலை நிச்சயம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதிபடத் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேலத்தில் கட்டப்பட்டுள்ள இரட்டை அடுக்கு மேம்பால திறப்பு விழாவில் பங்கேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேம்பாலத்தை திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, சென்னை - சேலம் இடையேயான 8 வழிச்சாலைத் திட்டத்தை தனது தனிப்பட்ட திட்டமாக பார்க்கக் கூடாது என குறிப்பிட்டார். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் அது இப்பகுதியின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணியாக விளங்கும் என்றும், சாலை விபத்துக்கள் பெருமளவில் குறையும் என்றும் அவர் தெரிவித்தார். 


மேலும், சேலம் அருகே 60 ஏக்கர் பரப்பளவில் பஸ்போர்ட் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மக்களிடம் இருந்து நிலங்களை பறித்து 8 வழிச்சாலை திட்டத்தை அவர்களிடம் திணிக்க மாட்டோம். எந்த ஒரு திட்டத்தையும் மக்கள் மீது மாநில அரசு திணிக்காது என்றும், நில உரிமையாளர்களை சமாதானப்படுத்தி 8 வழிச்சாலை அமைக்கப்படும் என்றும், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஏற்ப இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார். 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தவேண்டாம் என பல விவசாயிகள் போராடிய நிலையில், தற்போது முதல்வர் இவ்வாறு தெரிவித்திருப்பது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.