கோவிட்-19 (Covid-19) எட்டாத நிலையில், ஒரு வலுவான கோட்டையாக இருந்த தமிழகத்தின் (Tamil Nadu) நீலகிரி மாவட்டத்தையும் (Nilgiri District) இப்பெருந்தொற்று தற்போது தன் பிடியில் மெதுவாக சிக்கவைத்து வருகிறது. இந்த மாவட்டத்தின் கிராமப்புறங்களிலிருந்து இரண்டாவது கொரோனா நோயாளி பற்றி தெரிய வந்துள்ளது. தாங்காடு-ஓரானல்லி கிராமத்தைச் சேர்ந்த 85 வயதான மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பத்து நாட்களுக்கு முன்னர், ஒரு இறுதிச் சடங்கில கலந்துகொள்ள வந்த பலர், இந்த மூதாட்டியின் ஆசி பெற, இவரை சந்தித்ததாக தெரிய வந்துள்ளது.


கொரோனா வழிகாட்டுதல்களைப் பற்றி கவலைப்படாமல், பெங்களூரு, கோவை என பல இடங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்டோர் இந்த இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்டுள்ளனர்.


முன்னதாக, கோத்தகிரி தாலுக்காவின் கெர்பெட்டா கிராமத்தைச் சேர்ந்த 50 வயது பெண்மணி மாவட்டத்தின் கிராமப்புறங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபராக கண்டறியப்பட்டார். மேட்டுப்பாளயத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலிருந்து திரும்பிய பிறகு, அவர் கொரோனாவுக்கு நேர்மறையாக இருப்பது தெரிய வந்தது.


இந்த இரு கிராமங்களின் நுழைவாயில்களுக்கும் சுகாதார அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கெர்பெட்டா கிராமத்தைச் சேர்ந்த பெண்மணிக்கு தொற்று இருப்பது தெரிய வருவதற்கு முன்னர் அவர் பலரை சந்தித்ததால், அவர் மூலம் தொற்று பலருக்கு பரவி இருக்கலாம் என சுகாதார அதிகாரிகள் அஞ்சுகிறார்கள்.


கெர்பட்டா கிராமத்தைச் சேர்ந்த பெண்மணியின் சிகிச்சை ஊட்டி அரசு மருத்திவமனையில் நடந்து வருகிறது. ஓரானல்லி கிராமத்தைச் சேர்ந்த 85 வயது மூதாட்டியின் சிகிச்சை கோவை ESI மருத்துவ்பமையில் நடந்து வருகிறது.


கெர்பட்டா கிராம பெண்மணி சந்தித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சுமார் 100 பேரின் மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன.


ALSO READ: கொரோனா நெருக்கடியிலும் ஒரு குதூகலம்.. முகத்தில் மின்னும் 3 லட்சம் ரூபாய் தங்க முககவசம்


வெள்ளியன்று கண்டறியப்பட்ட நோயாளியுடன், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 117 ஆனது. இவர்களில் 56 பேர் ஊட்டி அரசு மருத்துவமனையில் (Government Hospital) சிகிச்சைப் (Treatment) பெற்று வருகின்றனர். மீதமுள்ளவர்களின் சிகிச்சை கோவை ESI மருத்துவமனையில் நடந்து வருகிறது.


ALSO READ: லேசர் ஒளி சோதனை.....COVID-19 க்கு எதிராக எந்த முகமூடி உங்களைப் பாதுகாக்கும்?