சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் ஊராட்சி ஆரம்ப சுகாதார மையத்தில் 20வது கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அவருடன் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அதிகாரிகள் இருந்தனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தமிழகத்தில் (TamilNadu) இதுவரை 9,39,87,972 பேர் தடுப்பூசியை செலுத்தி உள்ளனர். இந்த முகாம் முலம் 90% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. 18 வயதுக்கு மேல் உள்ள முதல் தவனை தடுப்பூசியை (Vaccine)5,20,29,899 பேர்( 88.19%) செலுத்தி உள்ளனர். இரண்டாம் தவனை தடுப்பூசியை 3,90,21,718 ( 67.41%) பேரும் செலுத்தி உள்ளனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | மீண்டும் லாக்-டவுன் வருமா! அரசு சொல்வது என்ன?


15 முதல் 18 வயதுடைய சிறுவர்கள் 33.46 லட்சம் தகுதி பெற்றுள்ளனர். அதில் 25,91,788 ( 77.46%)பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். பூஸ்டர் டோஸ் 10ம் தேதி தொடங்கப்பட்டது,  பூஸ்டர் தடுப்பூசி போட நேற்று வரை 4,48,394 பேர் கண்டறியபட்டனர். அதில் 3,44,497 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 



97 லட்சம் பேர் 2வது டோஸ் தடுப்பூசி உரிய காலத்தில் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அவர்கள் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முனைப்பு காட்டப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல் தவனை தடுப்பூசியை 100% செலுத்திய 2669  ஊராட்சிகளும், 24 நகராட்சிகளும் உள்ளன. மக்களைத் தேடி மருத்துவம் சார்பில் உயர் ரத்த அழுத்த சிகிச்சைக்கு 19 லட்சம் பேரும், 13.15 லட்சம் பேர் நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டவர்களும், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு இரண்டும் உள்ள 9.71 லட்சம் பேருக்கும் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. 



பேலியேட்னிவ் கேர் - சிகிச்சை 1,71,068 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய வகை நியோ வைரஸ் பரவி வருகிறது. வவ்வால் மூலம் பரவ கூடிய வைரசால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.  ஆனால் மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.  தடுப்பூசியை செலுத்தி பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.  அரசு பள்ளி மாணவர்கள் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள 544 பேருக்கு டேப் வழங்க திட்டம் இருந்தது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உள்ளதால், தேர்தலுக்கு பிறகு மாணவர்களுக்கு டேப் வழங்குவது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்" என்று கூறினார்.



 

ALSO READ | அதிமுகவோடு இருந்தால் லாபம், இல்லையென்றால் இழப்பு -கூட்டணி கட்சிகளுக்கு மறைமுக எச்சரிக்கை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR