அதிமுகவோடு இருந்தால் லாபம், இல்லையென்றால் இழப்பு -கூட்டணி கட்சிகளுக்கு மறைமுக எச்சரிக்கை

திமுக கட்சி அலுவலகமாக உள்ள அறிவாலயத்தில் கால் வைப்பதே அவமானம் என்றும் கட்சிக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 02:10 PM IST
  • அதிமுக ஆலோசனைக்கூட்டம் நிறைவு
  • கூட்டணி கட்சிகளுக்கு மறைமுக எச்சரிக்கை
  • கூட்டணி தர்மத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தல்
அதிமுகவோடு இருந்தால் லாபம், இல்லையென்றால் இழப்பு -கூட்டணி கட்சிகளுக்கு மறைமுக எச்சரிக்கை  title=

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகள் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிக்கான இடம் என தேர்தல் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுக கூட்டணி (AIADMK Alliance) கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவது மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்தும் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டது என்றார். 

திமுக மீது தாக்குதல்: 

திமுக-வின் 8 மாத ஆட்சியில் மக்கள் பெரும் அதிருப்திக்கு உள்ளாகி உள்ளனர். தேர்தல் வாக்குறுதிகள் திமுக காற்றில் பறக்கவிட்டு உள்ளனர். மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு உள்ளதால், இந்த தேர்தலில் மக்கள் எங்களுக்கு தான் வெற்றியை தருவார்கள் எனத் தெரிவித்தார்.

ALSO READ | நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக - பா.ஜ.க கூட்டணி தொடருமா?

விலகி சென்றால் அவர்களுக்கு தான் நஷ்டம்:

செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேசிய அவர், கூட்டணியை பொறுத்தவரை எந்த கட்சியாக இருந்தாலும் எங்களுடன் இருந்தால் மட்டுமே லாபம் என்றும் இல்லை என்றால் விலகி செல்லும் கட்சிக்கு தான் நஷ்டம் எனவும் கூறினார். 

வழக்கு பதிவு செய்ய வேண்டும்: 

திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் சங்கர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது போதாது என்றும் அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லை என்றால் இது போன்ற செயல் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவித்தார்.

ALSO READ | அதிகாரியை தாக்கிய திமுக எம்எல்ஏ! கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கம்!

கட்சிக்கு கலங்கம் - எச்சரித்த ஜெயக்குமார்:

நவநீதகிருஷ்ணன்  கட்சி பொறுப்பு நீக்கம் குறித்து பேசிய அவர் அதிமுகவில் இருந்து கொண்டு திமுக கட்சி அலுவலகமான அறிவாலயத்திற்கு செல்வது நாகரீகமற்ற செயல்.  அங்கு கால் வைப்பதே அவமானம். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர் பேசியது ஏற்றுகொள்ள முடியாது என்றும் எனவே கட்சிக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

முன்னதாக திமுக எம்.பி. கனிமொழியை புகழ்ந்து பேசிய ஒருநாள் கழித்து, அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து நவநீதகிருஷ்ணன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | திமுகவுக்கு ’ரூட்’ போட்ட நவநீதகிருஷ்ணன் - கட்சி பதவியை பறித்த அதிமுக

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News