மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது: SC
மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது...
மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது...
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. கர்நாடக அரசின் முயற்சிக்கு உதுவும் வகையில் மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த செயல்பாடு தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதை தொடர்ந்து, இந்நிலையில் சமீபத்தில் காவிரி குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசு, அனுமதி அளித்த மத்திய அரசுக்கு திராகவும் தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலுக்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதே போன்று அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசு நீதிமன்றத்தை அவமதிக்கிறது எனவும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கை அவசரமாக விசாரிக்குமாறு தலைமை நீதிபதியிடம் தமிழக அரசு தரப்பில் முறையிடப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், மேகதாது அணை தொடர்பான தமிழக அரசின் மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இதில், கர்நாடகா மாநிலத்தின் மேகதாது அணைக் கட்டுவது தொடர்பான அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தடை விதிக்க கோரி தமிழக அரசின் மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
உரிய அனுமதி இல்லாமல் கர்நாடகா அணைக்கட்ட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழக அரசின் மனு மீது 4 வாரங்களில் கர்நாடக பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.