`குவாட்டர் விலை ஏறிப்போச்சி` - கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை வைத்த மதுப்பிரியர்.!
குவாட்டர் விலையை குறைக்க கோரி கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்திய மதுப்பிரியரால் சர்ச்சை
தமிழகம் முழுவதும் மே தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே காவாகுளம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டார். இதில், கிராம சபை கூட்டம் தொடங்கியது முதலே கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துக் கொண்டிருந்தனர்.
மேலும் படிக்க | மே தினம் விடுமுறை - 200 கோடி ரூபாய் வசூல் செய்த டாஸ்மாக்
அப்போது, திடீரென கூட்டத்தில் கலந்து கொண்ட மது பிரியர் ஒருவர், ஒரு குவாட்டர் விலை 200 ரூபாய்க்கு அநியாயமாக விற்கப்படுவதாகவும், இதனை குறைக்க வேண்டும் என்றும் அமைச்சரிடம் புகார் தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினர் அவரை கூட்டத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து, தொடர்ந்து ஒவ்வொரு பகுதி மற்றும் தெருவாரியாக செலவினங்கள் வாசிக்கப்பட்டது. அப்போது, ஊராட்சியின் செயலர் செலவினங்களை வாசித்தபோது, அருந்ததியர் காலனி செலவிடப்பட்ட தொகை என வாசித்தார். உடனே கூட்டத்தில் இருந்த இளைஞர்கள், ‘தங்களது பகுதிக்கு தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு பல நாள் ஆயிற்று. ஆனால், இன்னும் அருந்ததியர் காலனி என எப்படி சொல்லலாம்’ என அமைச்சருக்கு முன்பாக கூச்சலிட்டனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க | டாஸ்மாக் தருவது மதுவா? விஷமா? மதுப்பிரியர்களை சுரண்டும் தமிழக அரசு!
இதையடுத்து, அருந்ததியர் காலனி எனக் கூறாமல் வேளாளர் காலனி என மாற்றி அழைக்கப்பட்டது. சமீபத்தில், சாதியைச் சொல்லி அமைச்சர் ராஜகண்ணப்பன் தன்னை அவமானப்படுத்தினார் என்று முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் புகார் தெரிவித்திருத்தது பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR