தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 8 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 8 ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. தென்கிழக்கு வங்கக்கடலுக்கு மீனவர்கள் இரண்டு நாட்களுக்குச் செல்ல வேண்டாம். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, காரைக்கால், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது.... தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் மீனவர்கள் தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


READ | தமிழகத்தில் மேலும் 3 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டம்!


கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 3 செ.மீ மழை பதிவாகி உள்ளது.சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசும் பதிவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.