தரிசு நிலத்தைக் காடாக மாற்றிய துருக்கி மனிதர்.!
ஒரு துருக்கிய மனிதர் 10,000 ஹெக்டேர் தரிசு நிலத்தை பெரும் காடாக மாற்றி அசத்தியுள்ளார்.
துருக்கிய கருங்கடல் மாகாணமான சினோப்பில் உள்ள போயாபட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹிக்மெட் கயா. அவருக்கு வயது 78. வனத்துறை தலைவராக இருந்து ஓய்வுபெற்றவுடன், வெறுமனே அவர் மீதமுள்ள வாழ்க்கையை கடக்கவில்லை. அடுத்த தலைமுறைக்கே பெரும் சொத்தை சேகரித்து வைத்துச் சென்றுள்ளார். இதற்காக 25 ஆண்டுகளை கயா செலவிட்டுள்ளார். 10,000 ஹெக்டர் தரிசு நிலம் ஓய்வுபெற்ற கயாவின் கண்ணில்பட்டுள்ளது. இதனை சாதாரணமாக கடந்துசெல்லவில்லை கயா. பெரும் கனவு முயற்சி ஒன்றைக் கையில் எடுத்தார்.
மேலும் படிக்க | மக்கள் வாழத்தகுதியற்ற இடமாக மாறி வரும் வட சென்னை..!
1989ம் ஆண்டில் ஆங்காங்கே தரிசு நிலங்களில் மரங்களை நட்ட கயா, பின்னாட்களில் 10,000 ஹெக்டர் நிலப்பரப்பிலும் மரக்கன்றுக்களை நட ஆரம்பித்தார். இதற்காக, உள்ளூர்வாசிகளின் உதவியை அவர் நாடினார். அவர்களுக்கும், இந்த மாபெரும் கனவில் இணைந்ததன் விளைவாக, தரிசு நிலம் முழுக்க மரக்கன்றுகள் நடப்பட்டன. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக அந்த நிலத்தை கயா பாதுகாத்து வந்துள்ளார். இத்தனை ஆண்டுகளில் 30 மில்லியன் மரங்களை நட்டு, பெரும் காட்டையே சொந்தமாக கயா உருவாக்கி அசத்தியுள்ளார். தான் முதன்முதலில் 10,000 ஹெக்டர் நிலத்தைப் பார்க்கும் போது எப்படி இருந்ததோ அதனை புகைப்படமாக கயா எடுத்துவைத்திருந்தார். அந்த நிலம் தற்போது பெரும் காடாக மாறியிருக்கும் புகைப்படத்தையும் தற்போது எடுத்துள்ளார்.
மேலும் படிக்க |வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவை குறைக்கும் முயற்சி வாபஸ்!
இந்த இரு படத்தையும் காண்பித்தபடி கயா கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கயாவின் அசாத்திய முயற்சிக்கு உலகம் முழுவதும் இருந்தும் பாராட்டுகள் கிடைத்து வருகிறது. பருவ நிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு, ஒருங்கிணைப்பு செயல்கள் செய்துவரும் காலத்தில் தனியொரு ஆளாக காட்டை உருவாக்கி அசத்திய கயாவை, சூழலியல் ஆர்வலர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த மாபெரும் செயல் குறித்துப் பேசிய கயா, "இந்த தரிசு மலைகள் அனைத்தும் செழிப்பான காடாக மாறியிருப்பது எனது மிகப்பெரிய பெருமை. நாங்கள் நல்ல காரியங்களைச் செய்திருக்கிறோம். தியாகம், முயற்சி, உங்கள் தேசம், உங்கள் நாடு மற்றும் உங்கள் பணி ஆகியவையும் இந்த வெற்றியில் அடங்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, இது மனிதநேயம்.!” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க | UAE: வெப்பத்தை சமாளிக்க துபாயில் போலி மழை! Fake Rain என்றால் என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR