தமிழகத்தில் மது வாங்க ஆதார் அட்டை கட்டாயமா? நீதிமன்றம் என்ன சொல்கிறது
டாஸ்மாக் கடையில் மது வாங்க ஆதார் அட்டையை ஏன் கட்டாயமாக்க கூடாது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டாஸ்மாக் கடைகளுக்கு பார் டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு நடைபெற்று உள்ளது. இதனால் இந்த டெண்டரை ரத்து செய்து, மீண்டும் புதிய டெண்டர் விட ஆணையிட வேண்டும் என மதுரையை சேர்ந்தவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இருதரப்பு வாதங்களை கேட்ட பிறகு, தமிழக டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் வரும் மார்ச் 12 ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சில கேள்விகளை கேட்டனர். அது,
> டாஸ்மாக் கடைகளில் மது வாங்க ஏன் ஆதார் அட்டையை கட்டாயமாக்கக்கூடாது?
> டாஸ்மாக் கடைகளை திறக்கும் நேரத்தை ஏன் மாற்றக்கூடாது (பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி)
> டாஸ்மாக் அருகிலேயே பார் இருப்பதால் தான் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே பார்களுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது?
> டாஸ்மாக் பாரின் உரிமம் ஓராண்டுக்கு பதில் 2 ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது ஏன்?
இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.