பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஆவின் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஆவின் விற்பனை பிரிவு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், இன்று அதாவது மார்ச் 4 ஆம் தேதி முதல்  ஆவின் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின், பாலை கொள்முதல் செய்வது, பதப்படுத்தும் செயல்முறை, குளிரூட்டுதல், விற்பனை ஆகிய அனைத்து செயல்களையும் ஒருங்கிணைந்து செய்து வருகிறது. இந்த நிறுவனம் தமிழக அரசின் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.


ஆவின் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இன்று முதல் நெய், தயிர், பாதாம் பவுடர், போன்ற பொருட்களின் விலைகள் அதிகரிக்கபட்டுள்ளன. 


மக்கள் அதிகமாக பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களாக இருக்கும் தயிர் மற்றும் நெய்யின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.515 ஆக இருந்த 1 லிட்டர் ஆவின் நெய்யின் விலை தற்போது ரூ. 535 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 27 ஆக இருந்த அரை லிட்டர் தயிர் தற்போது ரூ. 30 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம்தான் ஆவின் மையங்களில் நெய்யின் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.



ஆவின் பால் நிறுவனம் தமிழகத்தின் மிகவும் பிரபலமான பால் நிறுவனமாகும். இங்கு கிடைக்கும் பால் பொருட்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மை காரணமாக மக்கள் ஆவின் கடைகளை நாடுவது உண்டு. பால் தவிர ஆவின் மையங்களில், நெய், தயிர், வெண்ணெய், மோர், பனீர், பால் பவுடர், பாலால் செய்யப்படும் பானங்கள், பாலால் செய்யப்படும் இனிப்புகள், மைசூர்பாக், குலாப் ஜாமூன் உள்ளிட்ட பிற இனிப்பு வகைகள் ஆகியவையும் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு விற்கப்படும் பால் கோவாவுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 


மேலும் படிக்க | அடக்கடவுளே..! ஒரு எலுமிச்சம் பழம் 33 ஆயிரமா? 


இதற்கிடையில், மக்களுக்கு அத்தியவசியமான பொருட்களாக இருக்கும் நெய், தயிர் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது குறித்தும், விலை உயர்வு அமலுக்கு வருவது குறித்து 24 மணி நேரம் முன்னர் தான் அறிவிக்கப்பட்டது குறித்தும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளது.


ஏற்கனவே தனியார் பால் நிறுவனங்களுக்கு சாதகமாக ஆவின் பால் விற்பனையை குறைக்க செயற்கையான பால் தட்டுப்பாட்டை ஆவின் அதிகாரிகள் உருவாக்கி வரும் சூழ்நிலையில் தற்போது ஆவின் பால் பொருட்களின் கடுமையான விற்பனை விலை உயர்வு அதனை உறுதி செய்வதாக உள்ளது என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழக முதல்வர் அவர்கள் ஆவின் பால் பொருட்கள் விற்பனை விலை உயர்வு விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு பொதுமக்கள் தலையில் ஆவின் நிர்வாகம் சுமத்தியிருக்கும் விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. 


மேலும் படிக்க | கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR