கோயில்களில் பூஜைக்கு வைக்கப்படும் பொருட்களை பக்தர்கள் வாங்க ஆர்வம் காட்டுவர். அதனை பெரிதும் மதித்து வீடுகளில் வைத்தும் பூஜை செய்வர். அந்தவகையில் ஈரோடு அருகே பூஜையில் வைக்கப்பட்டு இருந்த ஒரு எலுமிச்சம்பழம் 33 ஆயிரத்து 500 ரூபாய்க்கு பக்தர் ஒருவர் ஏலம் எடுத்து உள்ளார். ஈரோடு மாவட்டம் விளக்கேத்தி அருகே உள்ளது புதுஅண்ணாமலை பாளையம். இந்த பகுதியில் அனைவருக்கும் பொதுவான பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரர் ஆலயம். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி அன்று அதற்கு அடுத்த நாளும் பண்டிகை நடைபெறுவது வழக்கம்.
மேலும் படிக்க | பங்குசந்தை முதலீட்டில் கடும் நஷ்டம் காரணமாக தம்பதி தூக்கிட்டு தற்கொலை!
பண்டிகையின் முக்கிய நிகழ்வாக சாமியின் நெற்றியில் வைத்திருந்த வெள்ளிக்காசு, அணிந்திருந்த மோதிரம் மற்றும் பாதத்தில் வைத்து எலுமிச்சை பழம் போன்றவற்றை ஏலம் விடுவது வழக்கம். இதே போல் இந்த ஆண்டும் நடைபெற்ற ஏலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கடும் போட்டிக்கிடையே ஒரு எலுமிச்சை பழத்தை 35 ஆயிரத்து 500 க்கு ஈரோட்டைச் சார்ந்த செளந்தர் என்பவரும் , நெற்றியில் வைத்திருந்த வெள்ளிக்காசை கோபாலகிருஷ்ணன் என்பவர் 33 ஆயிரத்து 500 க்கும் ஏலம் எடுத்தனர்.
இதே போல் சாமி அணிந்திருந்த வெள்ளி மோதிரத்தை நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் 53 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் எடுத்தனர். சாமியின் பாத்தில் வைக்கப்பட்டிருந்த எலுமிச்சை பழம் மற்றும் வெள்ளி பொருட்கள் அதிக தொகைக்கு ஏலம் போனது பக்தர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க | பெண்களுக்கு 1000 ரூபாய் திட்டம்: இந்த மாதமே அறிவிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR