இருசக்கர வாகன விபத்து - 3 பேர் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே திருமணத்திற்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய மூவர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
காளையார்கோவில் அருகே ஆண்டிச்சியூரணியை சேர்ந்த செல்லத்துரை, சங்கர், அஜித் ஆகிய மூவரும் சகோதரர்கள் ஆவர். இவர்கள் காளையார்கோவிலில் நடைபெற்ற தங்களது உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பினர்.
மூவரும் ஆண்டிச்சியூரணி விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் அருகில் இருந்த வயல்வெளிக்குள் பாய்ந்த நிலையில் செல்லத்துரை மற்றும் அஜித் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் படிக்க | ஆதீனத்திற்கு பல்லக்கு தூக்கப்போகும் அண்ணாமலை...
மேலும் படுகாயமடைந்த சங்கர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். உயிரிழந்த மூன்று பேர் உடலையும் காவல் துறையினர் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பிகள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | விரைவில் விடுதலையாகலாம் பேரறிவாளன்: உச்ச நீதிமன்றத்தின் சூசகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR