மாணவி தற்கொலைக்குக் காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை வேண்டும் - சீமான்
கோவை மாணவி தற்கொலை செய்தி கேட்டு கொதித்தெழுந்துள்ளார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
கோவை: கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த மாணவி ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவர் கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார். அதில் "யாரையும் சும்மாவிடக்கூடாது" என்று எழுதினார் . அதனையடுத்து , இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சம்மந்தப்பட்ட சின்மயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மாணவியின் பள்ளியில் பயின்ற மாணவர்கள் , மாணவியின் சடலத்தை வைத்திருந்த மருத்துவமனையின் முன்பும்,மாணவியின் வீட்டின் முன்பும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
ALSO READ கோவை மாணவி தற்கொலை வழக்கில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது
இந்நிலையில் இந்த மாணவியின் தற்கொலை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது ," கோவை மாவட்டம், உக்கடம் பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி ஆசிரியர் கொடுத்தப் பாலியல் தொந்தரவினால் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து நெஞ்சம் பதைபதைத்துப் போனேன். அண்மைக்காலமாக வெளிப்பட்டு வரும் கல்விக்கூடங்களில் நடைபெற்று வரும் பாலியல் கொடுமைகள் தொடர்பான செய்திகள் பெண் பிள்ளைகளின் நலவாழ்வு, அவர்களது சமூகப்பாதுகாப்பு குறித்தப் பெருங்கவலையை ஏற்படுத்துகின்றன.
மாணவியின் தற்கொலைக்குக் காரணமான கோவை சின்மயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைதுசெய்யப்பட்டது சற்றே ஆறுதலைத் தந்தாலும், அக்கொடுங்கோலனைச் சட்டத்தின் பிடியிலிருந்தும், தண்டனையிலிருந்தும் தப்பிக்கவிடாது, இனி எவருக்கும் இத்தகைய எண்ணமே எழாதவாறு தடுக்கும் வகையில் மிகக் கடுமையான தண்டனை உறுதிசெய்ய வேண்டுமெனவும், மாணவியின் மீதே பழிசுமத்தி அப்பிஞ்சை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, இளந்தளிர் கருகுவதற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்" என்று சீமான் ஆக்ரோஷமாக கூறியுள்ளார்.
ALSO READ கோவை மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு சக மாணவர்கள் போராட்டம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR