பொறியியல் பாடத்திட்டங்களை மாற்றியமைக்க நடவடிக்கை - உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
பொறியியல் பட்டப்படிப்பில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் புதிய பாடத்திட்டங்கள் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள கலைஞர் ஆய்வு மையத்தின் சார்பில் "கலைஞர் தமிழர்களின் புகழ் வானம்" என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரும், மாநில உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி பங்கேற்றார். இதனை தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, மறைந்த முதலமைச்சர் கலைஞரின் அயராத முயற்சியால் உயர்கல்வித்துறை பிரம்மாண்டமாக உயர்ந்திருக்கிறது என குறிப்பிட்டார்.
மேலும், கல்வி கற்க வரும் இளைஞர்களுக்கு சமூக நீதி கொள்கைகளைப் பற்றியும், சமூக நீதி பரவுகிற காரணமாக இருக்கிற திராவிட இயக்கங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள கலைஞர் ஆய்வு மையம் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். குறிப்பாக கல்லூரி மாணவிகள் திராவிட இயக்கங்கள் மற்றும் சமூக நீதிக் கொள்கையை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தினார்.
மேலும் படிக்க | ‘ஜாதி மதம் அற்றவர்கள்’ என சான்றிதழ் வாங்கிய தம்பதியி: குழந்தைகளுக்கும் விண்ணப்பம்
மேலும், இந்திய வரலாற்றில் தமிழர்களின் வரலாறும், பங்களிப்பும் மறைக்கப்பட்டு இருக்கிறது எனக்கூறிய பொன்முடி, இவை அனைத்தையும் கலைஞர் ஆய்வு மையம் தாங்கி பிடித்திருக்கிறது எனவும் கூறினார். மேலும், இங்கு, கலைஞரின் தொண்டுகள், திரைப்படக் கலை தொண்டுகள், எழுத்தாளராக, அமைச்சராக, ஆட்சியாளராக அவர் செய்த அனைத்தையும் பதிவு செய்து மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தினார்.
மேலு், ஆணும் பெண்ணும் சமம். பெண்கல்வி முக்கியம் என்று பெரியார் சொல்லாவிட்டால் இவ்வளவு பெண்கள் இப்போது கல்வி கற்று இருக்க முடியாது என குறிப்பிட்ட பொன்முடி, திராவிட மாடல் என்பதை கிண்டல் செய்பவர்கள் இருக்கிறார்கள் எனவும் ஆனால் இப்போது பெண்கள் அதிக அளவில் படிக்க காரணம் தந்தை பெரியார்தான் எனவும் கூறினார்.
கல்விக்காக திராவிட இயக்கம் ஆற்றிய பணிகளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் கடந்த காலங்களில் ஜாதி மதம் பேதம் இல்லாமல் அனைவரும் சமம் என்ற மானுடவியலுக்காக குரல் கொடுத்த ஒரே இயக்கம் திராவிட இயக்கம் மட்டும்தான் எனவும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, மனிதர்களை மனிதராக மதிக்க வேண்டும் என்பதை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் வலியுறுத்தி நடைமுறைப்படுத்தியுள்ளார்கள் என தெரிவித்த பொன்முடி, தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, பொறியியல் உயர்கல்வி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு உடனடியாக வேலை வாய்ப்பைப் பெருக்கும் வகையில் பாடத் திட்டத்தில் புதிய கல்வி முறையை புகுத்துவது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக்கூறினார். மேலும், அந்த புதிய பாடத் திட்டத்தை அமைக்க தனி குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, 12ஆம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வராத நிலையில் உயர்கல்வியில் சேர்வதற்கான கால அவகாசம் மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் இடஒதுக்கீடு அனைத்து பல்கலைக்கழகத்திலும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் பொன்முடி, விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய தமிழக அரசு சார்பாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு EPFO-ன் அதிரடி அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR