‘ஜாதி மதம் அற்றவர்கள்’ என சான்றிதழ் வாங்கிய தம்பதி: குழந்தைகளுக்கும் விண்ணப்பம்

தேவர்குளம் பஞ்சாயத்து பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் சில நாட்களுக்கு முன்னர் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் தனக்கும், தனது மனைவி சர்மிளாவுக்கும் சாதி, மதம் அற்றவர்கள் சான்றிதழ் வேண்டும் என்று விண்ணப்பம் கொடுத்துள்ளார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 24, 2022, 06:06 PM IST
  • ஜாதி மதம் அற்றவர்கள் என சான்றிதழ் பெற்ற தம்பதி.
  • இந்தியாவில் இதுவரை 7 பேர் சாதி, மதம் அற்றவர்கள் என்ற சான்றிதழ் பெற்றுள்ளார்கள்.
  • அதில் 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
‘ஜாதி மதம் அற்றவர்கள்’ என சான்றிதழ் வாங்கிய தம்பதி: குழந்தைகளுக்கும் விண்ணப்பம் title=

சிவகாசி அருகே உள்ள தேவர்குளம் பஞ்சாயத்து பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருக்கு வயது 35.  பட்டதாரி இளைஞரான இவர் கணினி பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் தனக்கும், தனது மனைவி சர்மிளாவுக்கும் சாதி, மதம் அற்றவர்கள் சான்றிதழ் வேண்டும் என்று விண்ணப்பம் கொடுத்துள்ளார். 

விண்ணப்பத்தை பெற்ற அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுவரை இப்படிப்பட்ட சான்றிதழ் இந்த தாலுகா அலுவலகத்தில் யாருக்கும் கொடுத்தது இல்லை என்று கூறி உள்ளனர். 

அப்போது காத்திகேயன் இந்தியாவில் இதுவரை 7 பேர் சாதி, மதம் அற்றவர்கள் என்ற சான்றிதழ் பெற்றுள்ளார்கள். அதில் 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறி அதற்கான ஆதாரத்தை வழங்கி உள்ளார். 

பின்னர் சில நாட்கள் கழித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி கார்த்திகேயன், அவரது மனைவி சர்மிளா ஆகிய இருவருக்கும் சாதி, மதம் அற்றவர்கள் என்ற சான்றிதழை வழங்கி உள்ளனர்.

Sivakasi: Couple get No Caste No Religion Certificate

மேலும் படிக்க | டெல்லியில் ஆட்டத்தை தொடங்கிய ஓபிஎஸ்! பொதுக்குழுவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு 

இது குறித்து தெரிவித்த கார்த்திகேயன், ‘எனது சொந்த ஊர் சிவகாசி தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே சாதி, மதம் அற்றவன் சான்றிதழ் கேட்டு மனு கொடுத்தேன். ஆனால் அப்போது இருந்த அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பின்னர் சான் றிதழ் பெற தேவையான ஆதாரங்களை சேகரிக்க தொடங்கி னேன். 

இணையத்தில் அதற்கான ஆதாரங்கள் கிடைத்தது. கடந்த 2018-ல் வக்கீல் சினேகா என்பவர் இதே போன்ற சான்றிதழை பெற்று இருந்தார். இதை ஆதாரமாக வைத்து தற்போது எனக்கும், எனது மனைவிக்கும் சாதி, மதம் அற்றவர்கள் என்ற சான்றிதழ் பெற்றுள்ளேன். 

Sivakasi: Couple get No Caste No Religion Certificate

நான் சுயமாக தொழில் செய்து வருகிறேன். எனது மனைவி சர்மிளா உதவி பேராசிரியராக பணியாற்றி தற்போது விடுப்பில் உள்ளார். அடுத்து சில மாதங்களில் மீண்டும் உதவி பேராசிரியர் பணிக்கு செல்ல உள்ளார். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மூத்த மகன் நேசன் (4) தற்போது தனியார் பள்ளி ஒன்றில் யு.கே.ஜி. படித்து வருகிறான். அவனுக்கும் சாதி,மதம் அற்றவர் என்ற சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருக்கிறேன். மேலும் 2-வது மகன் கரிகாலனுக்கு தற்போது 2 வயது தான் ஆகிறது. அவனுக்கும் இதே சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளேன்.’ என்று கூறினார். 

மேலும் படிக்க | திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகனும் பாஜக பிரமுகருமான சூர்யா அதிரடி கைது! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News