பாஜக-வுடம் அரசியல் தொடர்பு இல்லை - நடிகர் அஜித் உறுதி!
பாஜக-வுடம் அரசியல் தொடர்பு மட்டும் அல்ல, எந்த தொடர்பும் இல்லை., என உறுதிபடுத்தினார் நடிகர் அஜித்குமார்!
பாஜக-வுடம் அரசியல் தொடர்பு மட்டும் அல்ல, எந்த தொடர்பும் இல்லை., என உறுதிபடுத்தினார் நடிகர் அஜித்குமார்!
நேற்றைய தினம் திருப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றி நடிகர் அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் பாஜக கட்சியில் இணைந்தனர். இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், அஜித் ரசிகர்கள் பிரதமர் மோடியின் திட்டத்தினை பரப்ப வேண்டும் என தெரிவித்தார்.
இத்தகு நிகழ்வுகளால் நடிகர் அஜித் பாஜக-விற்கு துணை நிற்கின்றாரா என கேள்வி எழுந்தது. மேலும் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கருத்திற்கும், ரசிகர் என்ற பெயரில் சிலர் பாஜக-வில் இணைந்ததற்கும் கடும் விமர்சனங்கள் எழுந்தது. மேலும் சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்களுக்கு ஆதரவாக விஜய் ரசிகர்களும் களமிறங்கினர்.
இதற்கிடையில் அஜித் பாஜக- கட்சியை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் உள்ளாரா என்று அரசியல் விமர்சகர்கள் விமர்சிக்க தொடங்கினர்.
இந்நிலையில் தற்போது இதுதொடர்பாக அஜித் வசம் இருந்து அதிரடி அறிக்கை வெளிவந்துள்ளது.
அதில், "ரசிகர்கள் அனைவரும் அவரவர் வேலைகளை பார்க்க வேண்டும். எனக்கும் விருப்பம் வெறுப்புகள் உள்ளன. அதை உங்கள் மீது திணிக்க மாட்டேன். உங்கள் அரசியல் கருத்து உங்களுடையதாகவே இருக்கட்டும்.
என் பெயரோ என் புகைப்படமோ எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் இடம் பெறுவதை நான் சற்றும் விரும்பவில்லை" என பல கருத்துகளை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...