MGR நினைவு நாளில் வைரலாகும் அரவிந்த் சாமியின் MGR Look ...!!
“தலைவி” படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் நடித்துள்ள அரவிந்த் சுவாமியின் புதிய ஸ்டில்களை வெளியிட்டு தலைவி பட தயாரிப்பாளர்கள் MGR நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
மக்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் ‘தலைவி’ படமும் ஒன்று. இதற்கு பல காரணங்கள் உள்ளன. தமிழகத்தின் முதலமைச்சராக, கம்பீரமாக வாழ்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதாவை திரையில் காணும் ஆசை அனைவருக்கும் உள்ளது என்பது அவற்றில் ஒரு முக்கிய காரணமாகும்.
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் (J Jayalalitha) வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் ‘தலைவி’ படத்தில் பாலிவுட்டில் (Bollywood) முன்னணி நடிகைகளில் ஒருவரான கங்கணா ரணௌத் (Kangana Ranaut) முதல்வர் ஜெயலலைதா பாத்திரத்தில் நடிக்கிறார்.
மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் “தலைவி” படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் நடித்துள்ள அரவிந்த் சுவாமியின் புதிய ஸ்டில்களை வெளியிட்டு தலைவி பட தயாரிப்பாளர்கள் எம்.ஜி.ராமச்சந்திரன் (MGR) அவர்களின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் வேடத்தில் நடத்துள்ள நடிகர் அரவிந்த் சுவாமி, தனது எம்ஜிஆர் லுக்கை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர், “புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பாத்திரத்தில் நடித்தது எனக்கு கிடைத்த பெரிய கவுரம் மட்டுமல்ல, அது ஒரு பெரிய பொறுப்பு. என் திறமையை நம்பி, இந்த அரிய வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குனர் ஏ.எல். விஜய் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசியல் வழிகாட்டியாக இருந்தார். மிகப்பெரும் நடிகராக இருந்த எம்ஜிஆர், முன்னாதாக திமுக கட்சியில் இருந்தார். 1972 ல் திமுகவை விட்டு வெளியேறி, அதிமுக என்ற கட்சியை தொடக்கினார். 1977 ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்தார். 1987 டிசம்பர் 24 அன்று அவர் இறக்கும் வரை தொடர்ச்சியாக பத்து ஆண்டுகள் மாநில முதல்வராக இருந்தார்.
ALSO READ | ‘தலைவி’ படபிடிப்பு முடிந்தது.. இந்த படம் தனக்கு கிடைத்த அறிய வாய்ப்பு: கங்கனா
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR