‘தலைவி’ படபிடிப்பு முடிந்தது.. இந்த படம் தனக்கு கிடைத்த அறிய வாய்ப்பு: கங்கனா

பாலிவுட் நடிகை கங்கனா ரணௌத் தனது வரவிருக்கும் படமான ‘தலைவி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது என ட்விட்டரில்  அறிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 12, 2020, 11:56 PM IST
  • நடிகை கங்கனா ரணௌத் 'தலைவி' படப்பிடிப்பு முடிந்தது என ட்விட்டரில் பதிவு.
  • கங்கனா இந்த படம் தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு என்றார்.
  • ட்வீட்டில் தனது புகைப்படத்தையும் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை வெளியிட்டுள்ளார்.
‘தலைவி’ படபிடிப்பு முடிந்தது.. இந்த படம் தனக்கு கிடைத்த அறிய வாய்ப்பு: கங்கனா title=

புதுடெல்லி:  மக்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் ‘தலைவி’ படமும் ஒன்று. இதற்கு பல காரணங்கள் உள்ளன. தமிழகத்தின் முதலமைச்சராக, கம்பீரமாக வாழ்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதாவை திரையில் காணும் ஆசை அனைவருக்கும் உள்ளது என்பது அவற்றில் ஒரு முக்கிய காரணமாகும்.

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் (J Jayalalitha) வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் ‘தலைவி’  படத்தில் பாலிவுட்டில் (Bollywood) முன்னணி நடிகைகளில் ஒருவரான கங்கணா ரணௌத்  (Kangana Ranaut)  முதல்வர் ஜெயலலைதா பாத்திரத்தில் நடிக்கிறார். 

பாலிவுட் நடிகை கங்கனா ரணௌத் (Kangana Ranaut) தனது வரவிருக்கும் படமான ‘தலைவி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது என ட்விட்டரில்  அறிவித்துள்ளார். இப்படத்தில் முன்னாள் தமிழக முதல்வர் ஜே.ஜெயலலிதா வேடத்தில் நடித்திருப்பது, தனது வாழ்நாளில் கிடைத்த மிகச்சிறந்த வாய்ப்பு என கூறியுள்ளார்

அந்த ட்வீட்டில் கங்கனா, ஜெயலலிதாவாக தான் நடிக்கும் போது எடுத்த புகைப்படத்தையும், நடிக்கை ஜெயலலிதாவின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். 

ஏ.எல். விஜய் இயக்கியுள்ள இப்படத்தை விஷ்ணு இந்தூரி மற்றும் ஷைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரித்துள்ளனர். பல மொழிகளில் தயாரிக்கப்படும் இப்படத்தின் ஒளிப்பதிவை விஷால் விட்டல் செய்துள்ளார். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் (GV Prakash) குமார் இணைந்து இசையமைத்துள்ளனர்.

ALSO READ | ‘தலைவி’ பட shooting மீண்டும் துவக்கம்: மகிழ்ச்சியில் படங்களை share செய்த Kangana

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News