பசுமை வழிச்சாலை எதிர்ப்பு! மன்சூர் அலிகான் ஜாமீன் கோரி மனுதாக்கல்!
சென்னை-சேலம் இடையே அமைக்கப்பட உள்ள பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கைது செய்யப்பட்ட மன்சூர் அலிகான் ஜாமீன் கோரி இன்று மனுதாக்கல் செய்துள்ளார்!
சென்னை-சேலம் இடையே அமைக்கப்பட உள்ள பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கைது செய்யப்பட்ட மன்சூர் அலிகான் ஜாமீன் கோரி இன்று மனுதாக்கல் செய்துள்ளார்!
சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் பசுமை விரைவு சாலை அமைப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. பசுமை விரைவு சாலை அமைத்தால் சுமார் 66 கிலோ மீட்டர் தூரம் குறைகிறது. தற்போது சென்னை-சேலம் இடையே உள்ள 340 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணி நேரம் முதல் 6 மணி நேரம் ஆகும். ஆனால், இந்த சாலை அமைந்தால் தூரம் 274 கிலோ மீட்டராக குறையும். பயண நேரமும் 3 மணி நேரமாக குறையும்.
இந்த விரைவு சாலை தாம்பரத்தில் தொடங்கி காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு வந்தவாசி, போளுர், ஆரணி, செங்கம் வழியாக தருமபுரி மாவட்டத்தில் அரூர், தீர்த்தமலை, பாப்பிரெட்டிப்பட்டி வழியாக மஞ்சவாடி கணவாயை அடைகிறது.
இந்நிலையில், விளை நிலங்கள், வனப்பகுதிகள் அழிக்கப்படுவதாக கூறி இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சாலைக்காக பல கோடி மரங்கள் அழிக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்சூர் அலிகான் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் நேற்று சென்னை சூளைமேட்டில் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர் சேலம் கொண்டு வரப்பட்டு மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு அங்குள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சேலம் ஓமலூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.