குறை தீர்க்க கிளம்பிய மன்சூர் அலி கான் களத்திலிருந்து விலகிய காரணம் என்ன?
மன்சூர் அலி கான் முன்பு சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்தார். திண்டுக்கல் தொகுதியில் இருந்து 2019 மக்களவைத் தேர்தலில் போராடினார்.
கோலிவுட் நடிகர் மன்சூர் அலி கான் வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். மக்களின் கவனத்தைக் கவர, தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் குப்பைக் குவியலின் அருகே அமர்ந்திருந்த மன்சூர் அலி கான், தொண்டமுத்தூர் தொகுதியில் இருந்து சுயேட்சை வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். தேர்தலுக்கு சற்று முன்னர், அவர் தற்போது தேர்தலில் போட்டியிடாமல் விலகிக்கொள்வதாகக் கூறியுள்ளார். தனது இந்த முடிவிற்கு தனது பகுத்தறிவே காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
தான் பிரச்சாரத்திற்காக எங்கு சென்றாலும், அங்கெல்லாம் பணமும் போட்டியுமே நிறைந்துள்ளதாகவும் அவர் கூறினார். இப்படிப்பட்ட ஒரு சூழல் தனக்கு சங்கடத்தை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். கையில் ஒரு நோட்புக் ஒரு பேனாவுடன், மன்சூர் அலி கான் (Mansoor Ali Khan) மக்களின் பிரச்சனைகளை தெரிந்து கொண்டு, அவர்களது தொடர்பு விவரங்களையும் குறிப்பிட்டுக் கொண்டார். தான் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்படும்போது இந்த பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படும் என்று அவர் குப்பைக் குவியலுக்கு அருகில் அமர்ந்து வாக்குறுதி அளித்தார்.
மன்சூர் அலி கான் முன்பு சீமானின் (Seeman) நாம் தமிழர் கட்சியில் இருந்தார். திண்டுக்கல் தொகுதியில் இருந்து 2019 மக்களவைத் தேர்தலில் போராடினார். இருப்பினும், 2021 சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கான தனது முடிவை அறிவித்த மன்சூர் அலி கான், மார்ச் 18 அன்று தொண்டமுத்தூர் தொகுதியில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
தேர்தலுக்காக தனியாக பிரச்சாரம் செய்த அவர், பூங்காக்கள், மீன் சந்தைகள் உட்பட பல பொது இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினார். கோயம்புத்தூர் தொண்டமுத்தூர் தொகுதியில் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் திமுகவின் கார்த்திகேய சிவசேனாபதி ஆகிய இருவரும் போட்டியில் உள்ளனர்.
மக்களின் குறை தீர்க்கும் முனைப்புடன் இருந்த மன்சூர் அலி கான், திடீரென தேர்தலிலிருந்து (TN Elections) விலகிக்கொள்வதாக எடுத்த முடிவால் அனைவருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் பணம் பெற்றுக்கொண்டு, வாக்குக்களை பிரிக்கவே சுயேட்சையாக நிற்கிறார் என எழுந்த விமர்சனங்களே அவரது இந்த திடீர் முடிவுக்கு காரணம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR