Puducherry Assembly Elections 2021: புதுச்சேரியில் மார்ச் 30-ம் தேதி பிரதமர் மோடி பிரச்சாரம்

Puducherry Elections 2021: மார்ச் 30 ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். ஏற்கனவே பிப்ரவரி 25 அன்று புதுச்சேரியில் நடந்த பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 21, 2021, 09:05 AM IST
Puducherry Assembly Elections 2021: புதுச்சேரியில் மார்ச் 30-ம் தேதி பிரதமர் மோடி பிரச்சாரம் title=

புதுச்சேரி: 30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு (Puducherry Assembly Elections 2021) வாக்குப்பதிவு அடுத்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அங்கு அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் மார்ச் 30 ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி (Narendra Modi) உரையாற்றவுள்ளார். ஏற்கனவே பிப்ரவரி 25 அன்று புதுச்சேரியில் நடந்த பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பிரதமர் கலந்துக்கொள்ளும் தேர்தல் பேரணி வரும் 30 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று பாஜக தலைவர் ஆர் எம்பலம் செல்வம் (R Embalam Selvam) சனிக்கிழமை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். மேலும் வி நாராயணசாமி (V Narayanasamy) தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஊழல் நடந்ததாகவும்  அவர் குற்றம் சாட்டினார்.

ALSO READ |  புதுச்சேரியில் அடுத்தது நம்ம ஆட்சிதான், குடும்ப அரசியலால் காங்கிரஸ் சீர்குலைந்துள்ளது: அமித் ஷா

புதுச்சேரி தேர்தலில் பாஜக (BJP), என்.ஆர் காங்கிரஸ் (NR Congress) மற்றும் அதிமுக (AIADMK) கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அதேபோல பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அசாமின் போகாஹாட் (Assam's Bokakhat) மற்றும் மேற்கு வங்கத்தின் பாங்குராவில் (West Bengal's Bankura) நடைபெறும் தேர்தல் பொதுக் கூட்டங்களில் உரையாற்றவுள்ளார். மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்கள் 2021 மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை எட்டு கட்டங்களாக நடத்தப்படும். 

 

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் என ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்களில் (Assembly Elections 2021) பதிவாகும் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ALSO READ |   தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6 அன்று சட்டமன்ற தேர்தல்கள் நடக்கும்: தலைமை தேர்தல் ஆணையர்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News