பாமக மாநில துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித், இன்று அமமுக கட்சியில் இணைந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக, பாமக மற்றும் பாஜக கட்சிகளிடையே கூட்டணி உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது. அதிமுகவுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த பாமக, தேர்தலில் கூட்டணியில் இணைந்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது. 


பாமக - அதிமுக தொடர்பாக அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாசும் விளக்கம் கொடுத்தார். எனினும் இக்கூட்டணி தொடர்பான விமர்சனங்கள் குறைந்தபாடில்லை.


இதனையடுத்து பாமக மாநில துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகர் ரஞ்சித் திடீர் அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டார். மேலும், பாமகவின் மீது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். 


இந்நிலையில் பாமக மாநில துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித், இன்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார். 


இதுகுறித்து ரஞ்சித் தெரிவிக்கையில் "இளைஞர்கள் எதிர்பார்க்கும் தலைவர், நல்ல தலைமை தேவை என்பதால் தினகரன் கட்சியில் இணைந்தேன் 


சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட தலைவரை தேர்வு செய்துள்ளேன்" என தெரிவித்துள்ளார்.


மேலும் பாமகவில் இருப்பவர்கள் சிலர் அமமுக-விற்கு வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.