Actor Sarathkumar Join BJP Alliance : நடிகர் சரத்குமார் தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியை திடீரென பாஜகவில் இணைத்தது ஏன்? என்பதை அரசியல் வட்டாரம் பரபரப்பாக அலசிக் கொண்டிருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி சேரமாட்டேன், மதவாத அரசியலுக்கு ஒருபோதும் துணைபோக மாட்டேன் என கூறிக் கொண்டிருந்த சரத்குமார், கடந்த சில மாதங்களாக பாஜக உடன் கூட்டணி சேர பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக கூறிக் கொண்டிருந்தார். அண்மையில் அவரை மத்திய இணையமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர் சந்தித்த நிலையில், பாஜகவுடன் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக அறிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | குடியுரிமை திருத்தச் சட்டம்! மத்திய பாஜக அரசை எதிர்த்து மக்களுக்காக குரல் குடுத்துள்ள விஜய்!


அடுத்த சில தினங்களில் தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியையே பாஜகவுடன் இணைத்துவிட்டதாக அறிவித்திருக்கிறார். இது குறித்து விளக்கம் கொடுத்த சரத்குமார், " நாட்டின் வளர்ச்சிக்காகவும், வருங்கால இளைஞர்களின் நலனுக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தே முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி காமராஜரைப் போல ஆட்சி நடத்துகிறார்" என புகழாரம் சூட்டினார். இந்த சூழலில் தான் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமாருக்கு என்ஐஏ நோட்டீஸ் அனுப்பியுள்ள தகவலும் வெளியாகியுள்ளது. 


வரலட்சுமி சரத்குமாரின் முன்னாள் உதவியாளர் ஆதிலிங்கம் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு போதைப்பொருள் மற்றும் ஆயுத விநியோகத்தில் அவருக்கு சர்வதேச கடத்தல்காரர்களுடன் தொடர்பு இருப்பதை என்ஐஏ கண்டறிந்தது. ஆதிலிங்கத்திடம் இருந்து ரூ.2,100 கோடி மதிப்புள்ள ரூ.300 கிலோ ஹெராயின், ஏகே 47 துப்பாக்கி, 9 எம்எம் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் போதைப்பொருள் சப்ளை மூலம் கிடைக்கும் வருமானத்தை சினிமா துறையில் ஆதிலிங்கம் முதலீடு செய்வதை கண்டுபிடித்தனர். 


அதனால், ஆதிலிங்கம் பிஏவாக பணியாற்றிய நடிகை வரலட்சுமி சரத்குமாரை விசாரிக்கவும் முடிவு செய்திருக்கிறது என்ஐஏ. இந்த விசாரணைக்காக வரலட்சுமி சரத்குமாருக்கு சம்மனும் அனுப்பப்பட்டிருக்கும் சூழலில் அவர் என்ஐஏ விசாரணைக்கு ஆஜராவதற்கு காலவகாசம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் நடிகர் சரத்குமார் தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்துள்ளார். ஒருவேளை இந்த வழக்கில் வரலட்சுமி சரத்குமாருக்கு சிக்கல் வர வாய்ப்பு இருக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு சரத்குமார் இந்த முடிவை எடுத்திருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


மேலும் படிக்க | தமிழகத்தில் பிறை தெரிந்தது.. இன்று முதல் ரமலான் நோன்பு ஆரம்பம்: தலைமை காஜி அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ