Tamilaga Vettri Kazhagam First Meeting: கடந்த பிப்.2ஆம் தேதி நடிகர் விஜய் (TVK Vijay) தன்னுடைய விஜய் மக்கள் இயக்கத்தை, 'தமிழக வெற்றி கழகம்' என்னும் அரசியல் கட்சியாக அறிவித்திருந்தார். கட்சியாக அறிவித்து முதல் ஆலோசனை கூட்டம் சென்னை இசிஆர் பகுதியில் மறைமுக இடத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை கிழக்கு மாவட்டம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட தலைவர்கள், இளைஞரணி மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார்.


இடம் தெரியாமல் திணறிய நிர்வாகிகள்


அதேபோல் கேரளா மாநிலத்தில் இருந்து 14 மாவட்ட தலைவர்கள், தொண்டரணி, இளைஞரணி உள்ளிட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள கொஞ்சம் தாமதமாக வந்த நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூட்டம் மறைமுக இடத்தில் நடைபெற்றதால், ஆலோசனை கூட்டம் நடைபெறும் இடம் அவர்களின் தெரியாததால் நிர்வாகிகள் அனைவரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பல்வேறு தெருக்களிலும், சாலைகளிலும் ஏமாற்றமடைந்து அமர்ந்திருந்தனர்.


மேலும் படிக்க | விஜய்க்கு பின்னால் இருக்கும் அந்த அரசியல் புள்ளி யார்? ரகசியம்


அதேபோல் செய்தியாளர்கள் வீடியோ எடுப்பதை பார்த்து நிர்வாகிகள் தலை தெறிக்க ஓடினர். சிலர் எங்களை வீடியோ எடுத்து தவறாக போட மாட்டீர்கள் அல்லவா என்று கேட்டுக் கொண்டு வீடியோவுக்கு போஸ் கொடுத்தனர்.


விஜய் கலந்துகொள்ளவில்லை


கடந்த பிப். 2ஆம் தேதி நடிகர் விஜய் தன்னுடைய கட்சியை அறிவித்த நிலையில் முதல் ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஜய் கலந்து கொள்ளாதது ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


மறைமுக இடத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், நிர்வாகிகளுக்கு உணவு பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தில் பிரியாணி வழங்கப்பட்டது. தொடர்ந்து எந்த இடத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, அதில் என்ன மாதிரியான ஆலோசனைகள் வழங்கப்பட்டது குறித்து கேட்ட போது வாயையை திறக்கமால் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சென்றனர். 


கடும் எச்சரிக்கை


வாயை திறந்து சொல்லும் நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி உள்ளனர் என கூறப்படுகிறது. அதேபோல் வயதான மூதாட்டி ஒருவர் தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினராக சேர வந்த போது நிர்வாகிகளுடன் சேர்ந்து தலைமை அலுவலக கேட்டின் உள்ளே சென்றார். அப்போது, காவலாளி அந்த வயதான மூதாட்டியை உள்ளே அனுமதிக்காமல் வெளியே அனுப்பினார். தொடர்ந்து அந்த மூதாட்டி புலம்பிக் கொண்டே வெளியேறினார்.


மேலும் படிக்க | 'என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்...' அனைவருக்கும் நன்றி தெரிவித்த விஜய் - முழு அறிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ